விற்பனையில் உள்ள கியா சொனெட் எஸ்யூவி காரில் கூடுதலாக வசதி பெற்ற Aurochs எடிசன் மாடல் HTX வேரியண்டின் அடிப்படையில் விற்பனைக்கு ₹ 11.85 லட்சம் முதல் ₹ 13.45 லட்சம் வரை விற்பனைக்கு கிடைக்கின்றது.

Kia Sonet Aurochs

கியா சொனெட் காரின் பவர்ஃபுல்லான இன்ஜினாக 120ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 172 என்எம் டார்க் வழங்குவதுடன் 6 வேக ஐஎம்டி கியர்பாக்ஸ் மற்றும் 7 வேக டிசிடி மட்டுமே பெறுகின்றது.

1.5 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்ட மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற மாடல் 100 ஹெச்பி பவர் மற்றும் 240 என்எம் டார்க் வழங்குவதுடன் fixed-geometry-turbo நுட்பத்தை கொண்டு 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. அடுத்தப்படியாக, 6 வேக டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் மாடல் variable-geometry பெற்று 115 ஹெச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் வழங்குகின்றது.

தோற்ற அமைப்பில் முன்புற பம்பர், கிரில், கதவு சில்ஸ், பின்புற சறுக்கல் தட்டு மற்றும் சென்டர் வீல் கேப்களில் நிற மாறுபாடுகள் பெறுகிறது. கிரிலில் ஆரோக்ஸ் பேட்ஜிங்கையும் பெறுகிறது. கிராவிட்டி கிரே, அரோரா பிளாக் பேர்ல், ஸ்பார்க்லிங் சில்வர் மற்றும் க்லேசியர் ஒயிட் பேர்ல் ஆகிய நிறங்களை பெற உள்ளது.

இன்டிரியரில்,  8.0-இன்ச் தொடுதிரையுடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே இணைப்பு பெற்றுள்ளது. தானியங்கி எல்இடி ஹெட்லேம்ப், ஒற்றை சன்ரூஃப், டிரைவ் மோடுகள், பின்புற ஏசி வென்ட்களுடன் ஆட்டோமேட்டிக் ஏசி கட்டுப்பாடு, க்ரூஸ் கட்டுப்பாடு போன்றவை உள்ளது.

பாதுகாப்பு அம்சங்களில் நான்கு ஏர்பேக்குகள், அனைத்து இருக்கைகளுக்கும் சீட்-பெல்ட் நினைவூட்டல்கள், அனைத்து இருக்கைகளுக்கும் மூன்று-புள்ளி சீட்பெல்ட்கள், டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு உள்ளன.

KIA SONET AUROCHS price
Variants Prices
Sonet Aurochs Edition 1.0T iMT Rs 11.85 lakh
Sonet Aurochs Edition 1.0T DCT Rs 12.39 lakh
Sonet Aurochs Edition 1.5 iMT Rs 12.65 lakh
Sonet Aurochs Edition 1.5 AT Rs 13.45 lakh