Automobile Tamilan

ரெனால்ட் க்விட், கிகர் மற்றும் ட்ரைபர் என மூன்றிலும் நைட் & டே எடிசன் வெளியானது

renault night and day edition

பண்டிகை காலத்தை முன்னிட்டு ரெனால்ட் இந்தியா நிறுவனம் வெளியிட்டு இருக்கின்ற புதிய நைட் அண்ட் டே எடிசன் மாடல் கிகர், ட்ரைபர், மற்றும் க்விட் என மூன்றிலும் மிக சிறப்பான வரவேற்பினை பெறும் வகையில் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. வரும் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் முன்பதிவு துவங்கப்பட உள்ள இந்த மாடல் ஆனது முதலில் வருபவர்களுக்கு முதலில் வழங்கப்படும் மேலும் ஒட்டுமொத்தமாக 1600 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.

இதில் ரெனால்ட் க்விட் நைட் அண்ட் டே மாடல் RXL (O) விலை ரூபாய் 15,000 வரை உயர்த்தப்பட்டும், கிகர் RXL வேரியண்டின் அடிப்படையில் ரூ.15,000 வரை விலை கூடுதலாகவும், ட்ரைபர் RXL மாடல் அடிப்படையில் ரூபாய் 20,000 வரை உயர்ந்துள்ளது.

மூன்று மாடல்களும் வெள்ளை நிறத்திலான பாடிக்கொண்டு மேற்கூறையில் கருப்பு நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எனவே இரட்டை வண்ணக் கலவையில் அமைந்திருக்கின்றது. மற்றபடி முன்புற கிரில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கருப்பு நிறத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. கிகர் மாடலில் பின்புற டெயில் கேட்டில் கூட கருப்பு நிற கொடுக்கப்பட்டிருக்கின்றது.

கிகர் மற்றும் ட்ரைபர் நைட் & டே எடிசனில் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங் வசதி மற்றும் ரியர் வியூ கேமரா ஆதரவினை பெறக்கூடிய 9-இன்ச் தொடுதிரை இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பெறுகின்றன. கூடுதலாக, ட்ரைபர் நைட் & டே மாடலுக்கு பின்புற பவர் விண்டோஸ் உள்ளது.

கிவிட் காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 68hp பவர், 96 Nm டார்க் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

கிகர் மற்றும் ட்ரைபரில் 1.0 லிட்டர் energy பெட்ரோல் என்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க் 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

கிகர் எஸ்யூவி காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 100 hp பவரை 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm – Xtronic CVT 2,200-4,000 rpm) வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

(ex-showroom)

Exit mobile version