இந்தியாவில் கிடைக்கின்ற மிக குறைந்த விலை காம்பேக்ட் எஸ்யூவி மாடலான ரெனால்ட் கிகர் 2024 ஆம் ஆண்டிற்கான மாடலின் முக்கிய மாற்றங்கள், வசதிகள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம்.
மிக கடுமையான போட்டியாளர்கள் நிறைந்த 4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் உள்ள பிரசத்தி போட்டியாளர்கள் ADAS உட்பட அடிப்படையாக 6 ஏர்பேக் கட்டாயம் என மாறி வரும் நிலையில் டாப் வேரியண்டில் மட்டுமே கிகர் எஸ்யூவி 4 ஏர்பேக்குகள் கொண்டுள்ளது.
2024 Renault Kiger
3991 மிமீ நீளம் பெற்றுள்ள ரெனால்ட் கிகர் எஸ்யூவி காரின் வீல்பேஸ் 2500 மிமீ கொடுக்கப்பட்டு 5 நபர்கள் அமர்ந்து செல்லும் வகையில் இருக்கைகளை பெற்று 405 லிட்டர் கொள்ளளவு பெற்ற பூட்ஸ்பேஸ் உள்ள மாடலில் 1.0 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என இருவிதமான என்ஜின் ஆப்ஷன் பெறுகின்றது. போட்டியாளர்களிடம் டீசல் என்ஜின் இருந்த பொழுதும் இந்த காரில் டீசல் என்ஜின் இல்லை.
1.0 லிட்டர் energy பெட்ரோல் என்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க் 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
கிகர் எஸ்யூவி காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 100 hp பவரை 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm – Xtronic CVT 2,200-4,000 rpm) வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
ரெனால்ட் கிகர் வசதிகள்
கிகர் எஸ்யூவி காரில் புதிதாக RXL மற்றும் RXT (O) வேரியண்ட் இணைக்கப்பட்டிருப்பதுடன் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள வசதிகளில் மிக முக்கியமாக டாப் வேரியண்டில் வெல்கம் மற்றும் குட்பை சிக்யூன்ஸ் ஆனது ORVM மூலம் வழங்கப்பட்டிருப்பதுடன், லெதேரட் ஃபேபரிக் இருக்கைகள், லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங், ஆட்டோ IRVM, எல்இடி கேபின் லைட், க்ரூஸ் கண்ட்ரோல் வசதி ஆனது டர்போ வேரியண்டு மற்றும் RXZ எனர்ஜி வகையிலும் உள்ளன.
குறைந்த விலையில் 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்ட மாடலாக விளங்கும் கிகர் எஸ்யூவி காரில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே, வயர்லெஸ் சார்ஜர், PM2.5 காற்று ஃபில்டர், ARKAMYS சவுண்ட் சிஸ்டம், 16 அங்குல டைமன்ட் கட் அலாய் வீல் பெற்று முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் உள்ளது.
அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களில் துவக்க நிலை வேரியண்டுகளில் இரண்டு ஏர்பேக் உள்ள நிலையில் மற்ற வேரியண்டுகளில் 4 ஏர்பேக்குகள் உள்ளன. பொதுவான அம்சங்களில் ஏபிஎஸ் உடன் பிரேக் அசிஸ்ட் ரியர் பாரக்கிங் சென்சார், இஎஸ்பி, டிராக்ஷன் கண்ட்ரோல், ரியர் சீட் பெல்ட் ரிமைன்டர், ரியர் வியூ கேமரா, முன்புற பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.
ரெனால்ட் கிகர் போட்டியார்கள்
ரெனால்ட்டின் கிகர் எஸ்யூவி காரின் உடன்பிறந்த சகோதரன் நிசான் மேக்னைட் உட்பட மாருதி பிரெஸ்ஸா, கியா சொனெட், ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 உட்பட கூடுதலாக சிறிய ரக ஹூண்டாய் எக்ஸ்டர் மற்றும் டாடா பஞ்ச் ஆகியவற்றையும் எதிர்கொள்ளுகின்றது.
இவற்றில் ஹூண்டாய் வெனியூ, சொனெட் ஆனது ADAS வசதிகளை கொண்டிருந்தாலும் பெரும்பாலான போட்டியாளர்கள் அடிப்படையாக 6 ஏர்பேக்குகள் கொடுத்த துவங்கியுள்ளனர், ஆனால் தற்பொழுது 6 ஏர்பேக்குகள் கிகர் பெறவில்லை என்றாலும் அடுத்த தலைமுறை கிகர் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு எதிரபார்க்கப்படுகின்றது.
2024 Renault Kiger on-road Price in Tamil Nadu
ரெனால்ட் கிகர் எஸ்யூவி காரின் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை ரூ. 7.18 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை கிடைக்கின்றது. முழுமையான வேரியண்ட் வாரியான விலை பட்டியல் அட்டவனை பின்வருமாறு-
2024 RENAULT Kiger | |||
---|---|---|---|
Variant | Ex-showroom | on road Price | |
RXE 1.0L ENERGY MT | ₹ 5,99,990 | ₹ 7,18,423 | |
RXL 1.0L ENERGY MT | ₹ 6,59,990 | ₹ 7,89,627 | |
RXL 1.0L ENERGY AMT | ₹ 7,09,990 | ₹ 8,48,197 | |
RXT 1.0L ENERGY MT | ₹ 7,49,990 | ₹ 8,94,076 | |
RXT 1.0L ENERGY AMT | ₹,7,99,990 | ₹ 9,52,908 | |
RXT (O) 1.0L ENERGY MT | ₹, 7,99,990 | ₹ 9,52,908 | |
RXT (O) 1.0L ENERGY MT DT | ₹, 8,22,990 | ₹ 9,83,671 | |
RXT(O)1.0L ENERGY AMT | ₹ 8,49,990 | ₹ 10,13,569 | |
RXT(O)1.0L ENERGY AMT DT | ₹ 8,72,990 | ₹ 10,42,387 | |
RXZ 1.0L ENERGY MT | ₹, 8,79,990 | ₹ 10,47,781 | |
RXZ 1.0L ENERGY MT DT | ₹ 9,02,990 | ₹ 10,13,569 | |
RXZ 1.0L ENERGY AMT | ₹ 9,29,990 | ₹ 11,07,867 | |
RXZ 1.0L ENERGY AMT DT | ₹ 9,52,990 | ₹ 11,34,762 | |
RXT (O) 1.0L TURBO MT | ₹ 9,29,990 | ₹ 11,07,868 | |
RXT (O) 1.0L TURBO MT DT | ₹ 9,52,990 | ₹ 11,34,763 | |
RXZ 1.0L TURBO MT | ₹ 9,99,990 | ₹ 11,88.,651 | |
RXZ 1.0L TURBO MT DT | ₹ 10,22,990 | ₹ 12,75,781 | |
RXT (O) 1.0L TURBO CVT | ₹ 10,29,990 | ₹ 12,84,109 | |
RXT (O) 1.0L TURBO CVT DT | ₹ 10,52,990 | ₹ 13,13,879 | |
RXZ 1.0L TURBO CVT | ₹ 10,99,990 | ₹ 13,71,663 | |
RXZ 1.0L TURBO CVT DT | ₹ 11,22,990 | ₹ 13,99,653 |
கொடுக்கப்பட்டுள்ள ஆன் ரோடு விலை கூடுதல் ஆக்செரீஸ் சேர்க்கப்படும் பொழுது மாறுபடக்கூடும்.