Automobile Tamilan

டாடா கர்வ் பெட்ரோல், டீசல் விலை மற்றும் சிறப்பம்சங்கள்

2024 tata curvv launched

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள கூபே ரக ஸ்டைல் மாடலான கர்வ் பெட்ரோல் மாடல் ஆரம்ப விலை ரூபாய் 9.99 லட்சத்தில் துவங்குகிறது. சில வாரங்களுக்கு முன்பாக கர்வ்.இவி மாடல் ரூபாய் 17.49 லட்சத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

சந்தையில் கிடைக்கின்ற நடுத்தர எஸ்யூவிகளான கிரெட்டா, செல்டோஸ், எலிவேட், டொயோட்டா ஹைரைடர், எம்ஜி ஆஸ்டர், ஹெக்டர், மாருதி சுசூகி கிராண்ட் விட்டாரா மற்றும் புதிதாக வந்த சிட்ரோன் பாசால்ட் கூபே எஸ்யூவி மாடலை நேரடியாக எதிர்கொள்ளும் கர்வ் கார் போட்டியாளர்களை விட கூடுதலான வசதிகள் சிறப்பான கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்கள், நவீனத்துவமான வசதிகளை கொண்டிருக்கின்றது.

கர்வ் எஞ்சின் விபரம்

ATLAS architecture (Adaptive Tech forward Lifestyle Architecture) வடிவமைக்கப்பட்டுள்ள கர்வ காரில் இரண்டு பெட்ரோல் ஒரு டீசல் என மொத்தம் மூன்று விதமான எஞ்சின் ஆப்சன் பெற்று முதன்முறையாக இந்த நடுத்தர எஸ்யூவி பிரிவில் டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (DCA) பெறும் முதல் டீசல் மாடலாக விளங்குகின்றது.

ஹைப்பர்ஐயன் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 125 hp பவரை 5,500RPMயிலும், 1700-3500RPM-ல் 225NM டார்க் வெளிப்படுத்தும். இதில் ஆறு வேக மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் ஏழு வேக டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் உள்ளது.

நெக்சானில் உள்ள ரெவோட்ரான் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 119 hp பவரை 5,500RPMயிலும், 1700-4000RPM-ல் 170NM டார்க் வெளிப்படுத்தும். இதில் ஆறு வேகம் மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் ஏழு வேக டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் இடம்பெற்றுள்ளது.

கியாரோஜெட் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 116 hp பவரை 4,000RPMயிலும், 1500-2750RPM-ல் 260NM டார்க் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏழு வேக டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் ஆனது பயன்படுத்தப்பட்டுள்ளது.

கர்வ் நுட்பவிபரங்கள்

நீளம்xஅகலம்xஉயரம் (4308 x 1810 x 1630) மிமீ
வீல்பேஸ் 2560 mm
 

எஞ்சின்

1.5L Kryojet 1497 cc, 4-Cyl 1.2L Revotron engine 1199 cc, 4-Cyl Hyperion GDi engine 1199 cc, 4-Cyl
எரிபொருள் டீசல் பெட்ரோல் பெட்ரோல்
பவர் (kW/Bhp) 86.7 kW/113bhp @ 4000 rpm 88.2 kW/118bhp @ 5500 RPM 91.9 kW/123bhp @ 5000 rpm
டார்க் (NM) 260 Nm @ 1500 -2750 RPM 170 Nm @ 1750-4000 rpm 225 Nm @ 1750-3000 RPM
டிரான்ஸ்மிஷன் 6-Speed MT/ 7-Speed DCT 6-Speed MT/ 7-Speed DCT 6-Speed MT/ 7-Speed DCT
எரிபொருள் கலன்  

44 லிட்டர்

Boot space 500 லிட்டர்

கர்வ் மாடலில் Smart, Pure, Pure+, Pure+ S, Creative, Creative S, Creative+ S, Accomplished S மற்றும் Accomplished+ A போன்ற வேரியண்டுகள் விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ளது.

500 லிட்டர் பூட் ஸ்பேஸ் பெற்றுள்ள இந்த காரில் முழுமையான டிஜிட்டல் கிளஸ்ட்டர், 12.3 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்று பல்வேறு கனெக்ட்டிவ் வசதிகளை கொண்டிருக்கின்றது.

ADAS பாதுகாப்பு தொகுப்பில் டிரைவிங் சார்ந்த 20 அம்சங்களுடன் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஓவர் ஸ்பீட் அலர்ட்,  லேன் கீப் அசிஸ்ட், லேன் புறப்படும் எச்சரிக்கை, முன்னோக்கி மற்றும் பின்புற மோதல் எச்சரிக்கை, போக்குவரத்து எச்சரிக்கை அறிதல், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஹில் ஹோல்ட் கண்ட்ரோல் மற்றும் ஹில் டிசென்ட் கண்ட்ரோல், 360 சரவுண்ட் வியூ சிஸ்டம் பிளைண்ட் வியூ மானிட்டருடன் (இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் கிளஸ்டரில்), முன் பார்க்கிங் சென்சார்கள், 6 ஏர்பேக்குகள், 3 பாயிண்ட் ELR சீட்பெல்ட்களுடன் அனைத்து பயணிகளுக்கும் நினைவூட்டல்கள், சீட் பெல்ட் ஆங்கர் ப்ரீ-டென்ஷனர் மேம்பட்ட பாதுகாப்புடன் மற்றும் TPMS, காற்று சுத்திகரிப்பான் ஆகியவற்றை பெற்றுள்ளது.

கோல்டு எசன்ஸ், ப்ரிஸ்டைன் ஒயிட், ப்யூர் கிரே, டேடோனா கிரே மற்றும் ஓபரா ப்ளூ, புதிய ஃபிளேம் ரெட் ஆகிய வண்ண விருப்பம் உள்ளது. கூடுதலாக டூயல் டோன் நிறங்களும் உள்ளது.

Tata Curvv Price list

கர்வ் காருக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் டெலிவரி செப்டம்பர் 12ஆம் தேதி முதல் துவங்கப்பட உள்ளது. தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள அறிமுகச் சலுகை விலை அக்டோபர் 31, 2024 வரை மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version