இன்றைக்கு வெளியிட்ப்பட்டுள்ள டாடா மோட்டார்ஸ் கர்வ்.இவி எலக்ட்ரிக் காரின் சிறப்புகள் மற்றும் ரூ.17.49 லட்சம் விலை துவங்குகின்ற நிலையில் மற்றும் முழுமையான தொழில்நுட்ப விவரங்கள் முழுமையாக அறிந்து கொள்ளலாம்.
கர்வ்.இவி காரில் 45kwh மற்றும் 55kwh என இரு விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்று Creative 45, Accomplished 45, Accomplished+S 45, Accomplished+ 55, Accomplished+S 55 , Empowered 55, Empowered+ 55, ஆகிய வேரியண்டுகளை கொண்டிருக்கின்றது.
Tata Curvv.ev Price and specs
கர்வ் எலக்ட்ரிக் கூபே எஸ்யூவி மாடலின் 45kwh பேட்டரி பேக் ஆப்ஷனில் அதிகபட்சமாக 150 PS பவர் மற்றும் 215 NM டார்க் வெளிப்படுத்துகின்றது. இதன் முழுமையான சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 502 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே கர்வ்.இவி 45 மாடலின் உண்மையான பயணிக்கின்ற தொலைவு அனேகமாக 330 முதல் 350 கிலோமீட்டர் கிடைக்கலாம் என இந்நிறுவனம் உறுதிப்படுத்துகின்றது.
55kwh பேட்டரி பேக் ஆப்ஷனில் அதிகபட்சமாக 167 PS பவர் மற்றும் 215 NM டார்க் வெளிப்படுத்துகின்றது. இதன் முழுமையான சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 585 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே கர்வ்.இவி 45 மாடலின் உண்மையான பயணிக்கின்ற தொலைவு அனேகமாக 400 முதல் 425 கிலோமீட்டர் கிடைக்கலாம் என இந்நிறுவனம் உறுதிப்படுத்துகின்றது.
இரண்டு பேட்டரி ஆப்ஷன்களும் மணிக்கு அதிகபட்சமாக 160 கிமீ வேகமாக மட்டும் வரையறுக்கப்பட்டுள்ளது.
500 லிட்டர் பூட் ஸ்பேஸ் பெற்றுள்ள இந்த காரில் முழுமையான டிஜிட்டல் கிளஸ்ட்டர், 12.3 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்று பல்வேறு கனெக்ட்டிவ் வசதிகளை கொண்டிருக்கின்றது.
Level 2 ADAS பாதுகாப்புடன் 6 ஏர்பேக்குகள், காற்று சுத்திகரிப்பான், நேரடி TPMS, லேன் கீப் அசிஸ்ட், லேன் புறப்படும் எச்சரிக்கை, முன்னோக்கி மற்றும் பின்புற மோதல் எச்சரிக்கை உள்ளிட்ட வசதிகளுடன் கர்வ்.இவி மாடலுக்கான V2L மற்றும் V2V வசதியும் உள்ளது.
18 அங்குல அலாய் வீல், அனைத்து சக்கரங்களில் டிஸ்க் பிரேக் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. 20 கிமீ அல்லது அதற்கு குறைந்த வேகத்தில் பயணிக்கும் பொழுது பாதசாரிகளுக்கு ஒலி எழுப்பும் வகையிலான ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டு காரின் ஒலி எழுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கர்வ்.இவி மாடலுக்கு போட்டியாக எம்ஜி ZS EV, மற்றும் வரவிருக்கும் ஹூண்டாய் க்ரெட்டா EV, மாருதி eVX ஆகியவற்றையும் எதிர்கொள்ள உள்ளது.
- Curr.ev 45 creative – ₹ 17.49 லட்சம்
- Curr.ev 45 Accomplished – ₹ 18.49 லட்சம்
- Curr.ev 45 Accomplished +S- ₹ 19.29 லட்சம்
- Curr.ev 55 Accomplished – ₹ 19.25 லட்சம்
- Curr.ev 55 Accomplished +S- ₹ 19.99 லட்சம்
- Curr.ev 55 Empowered – ₹ 21.25 லட்சம்
- Curr.ev 55 Empowered +A- ₹ 21.99 லட்சம்