Automobile Tamilan

டெஸ்லாவை வீழ்த்தும் BYD ஆட்டோ எலக்ட்ரிக் வாகனங்களின் தலைவன்

byd seal ev

உலகின் ஆட்டோமொபைல் சந்தை மிக வேகமாக பேட்டரி மின்சார வாகனங்களை நோக்கி நகரும் நிலையில் பில்டு யூவர் ட்ரீம்ஸ் எனப்படுகின்ற BYD ஆட்டோ முன்னோடியாக வளர்ந்து வருகின்றது.

அமெரிக்காவின் டெஸ்லா உட்பட உலகின் மற்ற ஆட்டோமொபைல் ஜாம்பவான்களை விட வேகமாக சீன சந்தை மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் கவனத்தை பெறும் நிறுவனங்களில BYD முன்னணி வகிக்கின்றது.

BYD Auto

மொபைல் போன்களுக்கு பேட்டரி தயாரித்த நிறுவனத்தை 2003 ஆம் ஆண்டு வாங் சுவான்ஃபு என்பவர் கார்களை தயாரிக்கும் சிறிய கின்சுவான் ஆட்டோ நிறுவனத்தை கைப்பற்றி பிஒய்டி ஆட்டோ என்ற பெயரில் தனது முதல் காரை தயாரிக்க கனவுகளோடு அனுவபமில்லாத துறையில் நுழைந்தார்.

BYD நிறுவனத்தின் முதல் கார் (குறீயிடு பெயர் 316) மாடலின் வடிவமைப்பினை டீலர்களால் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து சந்தைக்கு வருவதற்கு முன்பே உற்பத்திக்கு செல்லாமலே ஸ்கிராப் செய்யப்பட்டு நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் இழப்பை சந்தித்தது. 2005 ஆம் ஆண்டு  73,000 RMB (தோராயமாக  ரூ.4.50 லட்சம்) என குறைந்த விலையில் F3 என்ற பெட்ரோல் என்ஜின் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு அமோக வரவேற்பினை சீன சந்தையில் பெற்றது.

2006 ஆம் ஆண்டு முதன்முறையாக F3e என்ற பெயரில் முதல் பேட்டரி காரை காட்சிப்படுத்தியது. 2022 முதல் ICE என்ஜின் உற்பத்தியை நிறுத்திக் கொண்டது. BYD நிறுவனத்தின் பிளேடு பேட்டரி முதன்முறையாக ஷாட் சர்க்யூட் ஏற்படுகின்றதா என்ற Nail penetration சோதனையில் வெற்றி பெற்ற முதல் பேட்டரி நுட்பத்தை கொண்ட நிறுவனமாக விளங்குகின்றது.

முதல் கார் மாடல் உற்பத்திக்கு செல்லாமல் தோல்வியடைந்த BYD நிறுவனம் இன்றைக்கு  முன்னணி NEV (New Energy Vehicle) தயாரிப்பாளராகவும், கார்கள் மட்டுமல்லாமல் பேருந்துகள், டிரக்குகள், மின்சார மிதிவண்டிகள், ஃபோர்க்லிஃப்ட், ஸ்கை ரயில் மற்றும் மின்சார வாகன பேட்டரிகளை தயாரித்து வருகின்றது. பல்வேறு முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு பேட்டரி சப்ளை செய்து வருகின்றது. கூடுதலாக டென்ஸா (DENZA), யாங்வாங் (Yangwang) மற்றும் ஃபாங்செங்போ (Fangchengbao) என மூன்று பிராண்டுகளை கொண்டுள்ளது.

குறிப்பாக பல்வேறு நாடுகளில் மின்சார பேருந்துகளை அறிமுகம் செய்வதில் தீவரமாக செயல்பட்டு வருகின்றது. 2010 ஆம் ஆண்டு முதல், BYD தனது உலகளாவிய சந்தையை தீவிரமாக விரிவுபடுத்தி வருகிறது, புதிய ஆற்றல் பேருந்துகள் மற்றும் பொது போக்குவரத்து மின்மயமாக்கலுக்கான டாக்சிகளை அறிமுகப்படுத்துகிறது. BYD நிறுவன மின்சார பொது போக்குவரத்து தீர்வுகள் இப்போது 70க்கு மேற்பட்ட நாடுகளில் 400க்கும் மேற்பட்ட நகரங்களில் இயங்குகின்றன.

தற்போது, BYD 58 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் தனது வாகனங்களை விற்பனை செய்து வருகின்றது. இந்திய சந்தையில் பிஒய்டி ஆட்டோ 3 என்ற மாடலின் மூலம் அமோக வரவேற்பினை பெற்றுள்ளது. நமது நாட்டில் ரூ.8,000 கோடி BYD முதலீடு செய்வதாக திட்டமிட்டிருந்த நிலையில் இந்திய-சீன எல்லை பிரச்சனை காரணமாக நிராகரிக்கப்பட்டது.

தற்பொழுது, பிஒய்டி நிறுவனம் 60 லட்சம் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்துள்ளது. சீன ஆலையில் 60 லட்சமாவது மாடலாக Bao 5 தயாரிக்கப்பட்டுள்ளது.

டெஸ்லா உள்ளிட்ட முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு மிகப்பெரும் சவாலாக உருவெடுத்துள்ள BYD உலகின் முன்னணி பேட்டரி வாகன தயாரிப்பாளராக தொடர்ந்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

உலகின் மிகப்பெரும் பணக்கார முதலீட்டாளர் வாரன் பஃபெட் ,  BYD நிறுவன தலைமை அதிகாரியும் நிறுவனருமான வாங் சுவான்ஃபுவை பற்றி கூறுகையில் ”இவர் நவீன கால தாமஸ் எடிசன் மற்றும் ஹென்றி ஃபோர்டின் கலவையாகும்,  இயற்பியல் விதிகளை அடிப்படையில் மாற்றியமைத்து மனிதகுலத்தை புதிய பாதைக்கு மாற்றியமைத்துள்ளார் ” என குறிப்பிடுகின்றார்.

Exit mobile version