2020 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் ஒலெக்ட்ரா-பிய்டி (Olectra-BYD’s C9) நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய இன்டர்-சிட்டி சி9 எலக்ட்ரிக் பஸ் ஒரு முறை மின்சார சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 300 கிமீ தொலைவின் வழங்கும் திறன் வாய்ந்த பேட்டரியை பெற்றுள்ளது.
இந்தியாவில் பல மாநிலங்களில் 200 க்கும் மேற்பட்ட மின்சார பஸ்களை வெளியிட்டுள்ள இந்நிறுவனம், இந்திய சாலைகளில் சுமார் 1.2 கோடி கிலோமீட்டர் தொலைவிலான பயணத்தை மேற்கொண்டு நாட்டின் முன்னணி மின்சார பேருந்து தயாரிப்பாளராக விளங்குகின்றது.
12 மீட்டர் நீளமுள்ள சி9, மாசு உமிழ்வு இல்லா பேருந்து 45 முதல் 49 இருக்கைகள் கொண்ட மின்சார பஸ் ஆகும். பயணிகளுக்கு மிகுந்த வசதியையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சி9 அதன் குறைவான இயக்க செலவுகள் காரணமாக நகரங்களுக்கு இடையேயான பஸ் ஆபரேட்டர்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மையையும் வழங்குகிறது. லித்தியம் ஃபெரா பாஸ்பேட் பேட்டரியால் இயக்கப்படுகிற இ-பஸ் சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 300 கிமீ வரை பயணிக்க இயலும் அதிகபட்சமாக பவர் 360 கிலோ வாட் மற்றும் மணிக்கு 100 கிமீ அதிகமான வேகத்தில் பயணிக்கும் திறனை கொண்டுள்ளது.
அரசாங்கத்தின் FAME 1 மற்றும் FAME 2 கொள்கைகளின் கீழ் சலுகைகளை பெற இயலும். மேலும் இந்த பேருந்தில் ஐரோப்பாவின் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப FDSS மற்றும் TUV சான்றிதழுடன் இந்திய பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப டிரைவர் சோர்வடைந்தால் எச்சரிக்கும் ADAS சிஸ்டம் மற்றும் ஐடிஎஸ் போன்ற பாதுகாப்பு வசதிகளும் உள்ளன.