Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

550 கிமீ ரேஞ்சு.., மாருதி சுசூகி eVX EV எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம் : Auto Expo 2023

by automobiletamilan
ஜனவரி 11, 2023
in கார் செய்திகள்
#maruti suzuki evx ev

இந்தியாவின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரின் புதிய மாருதி சுசூகி eVX EV எஸ்யூவி கான்செப்ட்  மின்சார மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆட்டோ எக்ஸ்போ 2023 அரங்கில் காட்சிக்கு வந்துள்ள eVX காரின் ரேஞ்சு 550 கிமீ ஆக இருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாருதி சுசூகி eVX கான்செப்ட் 2025 ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்நிறுவனத்தின் முதல் EV SUV (குறியீடு: YV8) காராக விளங்கும்.

Maruti Suzuki eVX SUV

சர்வதேச அளவில் சுசூகி நிறுவனத்தால் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள மின்சார கார்களுக்கான பிளாட்ஃபாரத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட உள்ள இவிஎக்ஸ் மாடல் டொயோட்டா நிறுவனத்துடன் இணைந்தும் தயாரிக்கப்பட்டதாக விளங்கலாம்.

உற்பத்திக்கு செல்ல உள்ள மாருதி YV8 எஸ்யூவி மற்றும் டொயோட்டா பிராண்டில் வரவுள்ள மாடலும் இந்தியாவில் குஜராத்தில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் சர்வதேச சந்தைகளிலும் விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படும்.

புதிய eVX எஸ்யூவி 4,300 மிமீ நீளம், 1,800 மிமீ அகலம் மற்றும் 1,600 மிமீ உயரம் கொண்டதாக இருக்கும் என்று மாருதி குறிப்பிட்டுள்ளது. இது கிட்டத்தட்ட தற்போது இந்திய சந்தையில் கிடைக்கின்ற கிரெட்டா போன்ற நடுத்தர எஸ்யூவி கார்களுக்கு இணையான போட்டியாளராக விளங்கும்.

eVX டிசைன் அம்சங்கள்

விற்பனையில் உள்ள மாருதி கார்களின் டிசைன் அம்சங்களை பெறாமல் தனித்துவமான வடிவமைப்பினை கொண்டுள்ள eVX எஸ்யூவி காரின் முகப்பு அமைப்பில் மிக நேர்த்தியான எலக்ட்ரிக் கார்களுக்கு உரித்தான அமைப்புடன் ஒற்றை கிரில் அமைப்புடன் இனைந்த ஹெட்லைட்  மற்றும் எல்இடி ரன்னிங் விளக்குகளை பெற்றுள்ளது.

அதிகப்படியான கிரவுண்ட் கிளியரண்ஸ், உயரமான வீல் ஆர்சு, கூபே ரக வடிவத்திலான எஸ்யூவி மாடலாக அமைந்துள்ளது. அனைத்து விளக்குகளும் எல்இடி ஆக இணைக்கப்பட்டுள்ளது.

Suzuki eVX range

புதிய eVX கான்செப்ட் காரில் 60kWh பேட்டரியைப் பெற்று அதிகபட்சமாக சுமார் 550கிமீ தொலைவு பயணிக்கும் ரேஞ்சை கொண்டிருக்கும் என்று மாருதி அறிவித்துள்ளது. 48kWh பேட்டரி அதிகபட்சமாக 400கிமீ வரம்பினை வழங்கலாம்.

Tags: Maruti Suzuki eVX EV
Previous Post

டாடா சஃபாரி, ஹாரியர் எலெக்ட்ரிக் எஸ்யூவி டீசர் வெளியீடு – Auto Expo 2023

Next Post

ஆட்டோ எக்ஸ்போ 2023: கியா KA4 (கார்னிவல்) அறிமுகம்

Next Post
Kia KA4 Carnival

ஆட்டோ எக்ஸ்போ 2023: கியா KA4 (கார்னிவல்) அறிமுகம்

  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version