பிரபலமான ஹாரியர் எஸ்யூவி காரின் தோற்ற உந்துதலை கொண்டதாக வந்துள்ள டாடா விங்கர் வேன் மாடலில் பிஎஸ்6 என்ஜின் பெற்றதாக ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபோர்ஸ் டிராவலர் மாடலுக்கு சவாலாக விங்கர் விளங்குகின்றது.

பள்ளி, ஸ்டாஃப், டூர் மற்றும் டிராவல் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ள விங்கர் வேனில் 100 ஹெச்பி பவர் மற்றும் 200 என்எம் டார்க் வழங்குகின்ற 2.2 லிட்டர் DICOR டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. லிட்டருக்கு 10 கிமீ மைலேஜ் தரவல்லதாகும்.

முன்பக்கத்தில், டாடா விங்கர் ஃபேஸ்லிஃப்ட் இம்பேக்ட் 2.0 வடிவமைப்பு மொழியுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இம்பேக்ட் 2.0 டிசைனை அடிப்படையாகக் கொண்ட முதல் டாடா கார் ஹாரியர் அதனை தொடர்ந்து அல்ட்ரோஸுக்கும் பயன்படுத்தப்பட்டது. முன்புறம் இப்போது ஹாரியருக்கு இணையாக அமைந்திருக்கின்றது. மேலே எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள், டாடா லோகோவுடன் கிடைமட்ட குரோம் ஸ்ட்ரிப், புதிய கிரில் மற்றும் பம்பர் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஹெட்லைட் போன்றவை பெற்றுள்ளது.

இன்டிரியரிலும் மேம்பட்ட பல்வேறு நவீன வசதிகளடன் ஏசி வென்ட், புஸ் பேக் இருக்கைகள், யூஎஸ்பி போர்ட், தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.