டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சஃபாரி மற்றும் ஹாரியர் என இரு எஸ்யூவி கார்களின் அடிப்படையில் எலெக்ட்ரிக் மாடலை கண்காட்சியில் காட்சிக்கு கொண்டு வரவுள்ளது. தற்போது வெளியிட்டுள்ள டீசர் வீடியோவில் டியாகோ எலக்ட்ரிக் ஸ்பெஷல் எடிசன் மாடலும் விற்பனைக்கு ஆட்டோ எக்ஸ்போ 2023 அரங்கில் வெளியிடப்படலாம்.

டாடா சஃபாரி, ஹாரியர் EV

தற்போது விற்பனையில் உள்ள IC என்ஜின் இடம்பெற்றிருக்கின்ற சஃபாரி மற்றும் ஹாரியர் என இரண்டின் அடிப்படையில் மின்சார காரினை உருவாக்கும் முயற்சியில் டாடா மோட்டார்ஸ் ஈடுபட்டுள்ளதை உறுதி செய்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் தனது ஜிப்ட்ரான் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சார கார்களாக நெக்ஸான், டிகோர், டியாகோ ஆகியவற்றை விற்பனை செய்து வருகின்றது. எனவே, இதன் அடிப்படையிலான நுட்பத்தை சஃபாரி மற்றும் ஹாரியரும் பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது.

டாடா கர்வ் மற்றும் அவினியா எலக்ட்ரிக் கான்செப்ட்களின் மேம்பட்ட மாடலை மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளது.

மேலும் படிக்க – 2023 ஆட்டோ எக்ஸ்போ பற்றி செய்திகள்