சீனாவின் FAW குழுமத்தின் ஹெய்மா 7எக்ஸ் எம்பிவி கார் இந்திய சந்தையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிறுவனம் இ1 இவி மின்சார கார் மற்றும் 8எஸ் எஸ்யூவி காரையும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியுள்ளது.
First Automobile Works (FAW Group) எனப்படுகின்ற சீன அரசு சார்பு நிறுவனமாக செயல்படுகின்ற ஆரம்ப காலங்களில் ஹைய்மா ஆட்டோமொபைல் பிராண்டில் மஸ்தா நிறுவன கார்களை ரீபேட்ஜ் செய்து விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது இந்நிறுவனம் சொந்தமாக கார்களை உற்பத்தி செய்து வருகின்றது. ஆரம்ப காலங்களில் மஸ்டா பிளாட்ஃபாரம் அடிப்படையில் கார்களை வடிவமைத்த இந்நிறுவனம் இப்பொழுது தனது ஹைய்மா சர்வதேச பிளாட்ஃபாரத்தை சொந்தாமாக உருவாக்கி எஸ்யூவி முதல் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து வருகின்றது. பெரும்பாலும் இப்போதும் மஸ்டா கார்களின் நுட்பங்களை சார்ந்தே உள்ளது.
சீனாவில் நடந்த 2019 குவாங்சோ ஆட்டோ கண்காட்சியில் ஹெய்மா ஆட்டோமொபைல் 7 எக்ஸ் வெளிப்படுத்தியது. 7எக்ஸ் மாடல் 7 சீட்டர் எம்பிவி 1.6 லிட்டர் டி-ஜிடிஐ எஞ்சின் மூலம் 193 ஹெச்பி பவர் மற்றும் 293 என்எம் டார்க்கை வழங்குகின்றது. மேலும், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 0-100 கிமீ வேகத்தை 8 வினாடிகளுக்குள் எட்டிவிடும். அதே எஞ்சின் ஹெய்மா 8 எஸ் எஸ்யூவியிலும் பயன்படுத்தப்படுகிறது.
இன்னோவா காருக்கு சவால் விடுக்கும் வகையில் இந்த எம்பிவி கார் விளங்குகின்றது. இந்தியாவில் பேர்டு ஆட்டோமோட்டிவ் நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்து விற்பனைகு கொண்டு வரவுள்ளது.