ஹோண்டா கார்கள் & எஸ்யூவி விலை உயர்ந்தது – ஜிஎஸ்டி

சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு பிறகு செஸ் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் நடுத்தர கார்கள் முதல் ஆடம்பர கார்கள் வரை விலை கனிசமாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் ஹோண்டா கார்கள் மற்றும் எஸ்யூவி விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஹோண்டா கார்கள் & எஸ்யூவி

சரக்குகள் மற்றும் சேவைகள் வரியில் உள்ள செஸ் எனப்படுகின்ற இழப்பீட்டு வரி நடுத்தர கார்கள் மற்றும் எஸ்யூவி உட்பட ஆடம்பர கார்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான நிறுவனங்களின் கார்கள் மற்றும் எஸ்யூவியின் விலையை உயர்த்த தொடங்கியுள்ளது. கடந்த செப்டம்பர் 11ந் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

ரூ.7003 முதல் அதிகபட்சமாக ரூ.89,069 வரை விலையை இந்நிறுவனம் உயர்த்தியுள்ளது. இந்நிறுவனத்தின் பிரபலமான சிட்டி செடான் கார் ரூ.7003 முதல் அதிகபட்சமாக ரூ.18,791 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிஆர்-வி எஸ்யூவி மாடல் விலை ரூ. 2,490 முதல் அதிகபட்சமாக ரூ.18,242 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரிமியம் ரக சிஆர்-வி எஸ்யூவி மாடல் ரூ. 75,034 முதல் அதிகபட்சமாக ரூ.89,069 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

 

சமீபத்தில் டொயோட்டா , ஃபியட் கிறைஸலர் மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்கள் விலை உயர்வினை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடதக்கதாகும்.

தொடர்ந்து நமது மொழியில் ஆட்டோமொபைல் செய்திகளை வாசிக்க எங்களுடைய

ஃபேஸ்புக்கில் பின் தொடர- https://www.facebook.com/automobiletamilan/ 

டிவிட்டரில் பின் தொடர- https://twitter.com/automobiletamil

Exit mobile version