Automobile Tamil

ஹூண்டாய் கார்கள் & எஸ்யூவி விலை உயர்ந்தது – ஜிஎஸ்டி

ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் தனது கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்களின் விலையை ஜிஎஸ்டி செஸ் வரி உயர்வின் காரணமாக ரூ.12,547 முதல் அதிகபட்சமாக ரூ.84,867 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் கார்கள் & எஸ்யூவி

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளராக விளங்கும் ஹூண்டாய் நிறுவனம் தன்னுடைய பிரிமியம் எஸ்யூவி , காம்பேக்ட் ரக எஸ்யூவி மற்றும் நடுத்தர ரக செடான் மாடல்களின் விலையை ஜிஎஸ்டி வரியின் காரணமாக உயர்த்தியுள்ளது. விலை உயர்வு செப்டம்பர் 12 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

தீபாவளிக்கு முன்னதாக 12,000 வெர்னா கார்களை விற்பனை செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ள நிலையில், முதல் வாரத்தில் 7,000 முன்பதிவுகளை பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காரின் விலை வேரியன்ட் வாரியாக விலை உயர்வு மாறுபட்டாலும் அதிகபட்சமாக ரூ.29,090 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

பிரபலமான ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி ரூ.20,900  முதல் ரூ. 55,375  வரை உயர்த்தப்பட்டுள்ளது. மற்றொரு எஸ்யூவி மாடலான டூஸான் ரூ. 64,828 முதல் அதிகபட்சமாக ரூ.84,867 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

எக்ஸ்கூட்டிவ் செடான் ரக மாடலான எலன்ட்ரா ரூ.50,312 முதல் அதிகபட்சமாக ரூ.75,991 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சிறிய ரக கார் மாடல்களில் எலைட் ஐ20 காரின் ரூ.12,547 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் டொயோட்டா , ஃபியட் கிறைஸலர் மற்றும் ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் விலை உயர்வினை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடதக்கதாகும்.

தொடர்ந்து நமது மொழியில் ஆட்டோமொபைல் செய்திகளை வாசிக்க எங்களுடைய

ஃபேஸ்புக்கில் பின் தொடர- https://www.facebook.com/automobiletamilan/ 

டிவிட்டரில் பின் தொடர- https://twitter.com/automobiletamil

Exit mobile version