Automobile Tamilan

ஜனவரி 2025ல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை மூன்று சதவீதம் வரை உயருகின்றது.!

BMW 5 Series LWB

இந்தியாவின் ஆடம்பர எஸ்யூவி சந்தையில் பிரபலமாக விளங்குகின்ற பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் இந்திய தயாரிப்புகள் அதாவது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற மாடல்களும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற முற்றிலும் வடிமைக்கப்பட்ட மாடல்களும் மூன்று சதவீதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வரும் உற்பத்தி மூலப்பொருட்களின் விலை உயர்வு போக்குவரத்து செலவுகள் மற்றும் பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை சூட்டிக்காட்டி விலை உயர்வை பிஎம்டபிள்யூ நிறுவனமும் அறிவித்துள்ளது.

பிஎம்டபிள்யூ மட்டுமல்லாமல் சமீபத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் கூட விலையை உயர்த்தி அறிவித்திருந்தது இதனை தொடர்ந்து பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் அடுத்தடுத்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version