டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ரூபாய் 9,000 கோடி வரையிலான உற்பத்தி திறனுக்கான முதலீடு திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பாக வின்ஃபாஸ்ட் ரூ.16,000 கோடி முதலீடு திட்டங்களுக்கான முதற்கட்ட தொழிற்சாலை கட்டுமான பணிகளை துவங்கிய நிலையில், இந்த ஆண்டின் இரண்டாவது மிகப்பெரிய முதலீடாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் துவங்க உள்ள டாடா ஆலையில் சுமார் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் மற்றும் விஷ்ணு, ஐஏஎஸ், நிர்வாக இயக்குனர் & தலைமை நிர்வாக அதிகாரி, மற்றும் பிபி பாலாஜி, டாடா மோட்டார்ஸ் சிஎஃப்ஓ இடையே கையெழுத்திட்டுள்ளனர்.
தொழில்துறை அமைச்சர் டாக்டர்.டி.ஆர்.பி.ராஜா, தொழில்துறை, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை செயலாளர் திரு. அருண் ராய் ஐ.ஏ.எஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் குழுமத்தின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.