இந்திய ராணுவத்துக்கு புதிய வாகனத்தை தேர்வு செய்வதற்கு பங்கேற்ற மஹிந்திரா ஸ்கார்ப்பியோ மற்றும் டாடா சஃபாரி எஸ்யூவிகளில் இரு கார்களுமே வெற்றி பெற்றிருந்த நிலையில் நிதிரிதீயாக ஸ்கார்ப்பியோவை பின்னுக்கு தள்ளி சஃபாரி வெற்றி பெற்றுள்ளது.
பல ஆண்டுகளாகவே பயன்படுத்தப்பட்டு வரும் மாருதி ஜிப்ஸி காருக்கு மாற்றாக புதிய மாடலை தேர்வு செய்வதற்காக மலையறுதல் ,பனி , பாலைவனம் , சதுப்பு நிலம் என பல தரப்பட்ட சோதனைகளில் வெற்றி பெற்ற இந்தியாவின் தயாரிப்பாளர்களான டாடா நிறுவனத்தின் சஃபாரி ஸ்ட்ரோம் மற்றும் மஹிந்திராவின் ஸ்கார்ப்பியோ மாடல்களும் நிதி ஒப்பந்தம் வாயிலாக ஸ்கார்ப்பியோவை பின்னுக்கு தள்ளிய சஃபாரி காரை இந்தியாவின் புதிய ராணுவ வாகனமாக தேர்வு செய்துள்ளனர். முதற்கட்டமாக 3192 கார்களுக்கான ஆர்டர்களை பெற்றுள்ள டாடா மோட்டார்ஸ் வருகின்ற வருடங்களில் இதுபோன்று 10 மடங்கு கூடுதலான ஆர்டர்களை பெற வாய்ப்புகள் உள்ளது.
முந்தைய செய்தி ; புதிய ராணுவ வாகன சோதனையில் வெற்றி யாருக்கு ?
பயன்பாட்டில் உள்ள காரினை விட மிகசிறப்பாக மேம்படுத்தப்பட்ட உறுதிமிக்க செயல்பாட்டினை வெளிப்படுத்தும் காராகவும் , ஆஃப் ரோடு சாலைகளுக்கு ஏற்ற வாகனமாகவும் டாடா சஃபாரி மாடலை ராணுவத்துக்கு டாடா வடிவமைக்க உள்ளது.
தற்பொழுது பயன்பாட்டில் உள்ள மாருதி ஜிப்ஸி வாகனம் ஜிஎஸ்500 (GS 500 – General Service 500kg) எனப்படும் 500 கிலோ எடை பிரிவில் உள்ளதால் பெருகிவரும் சவால்களுக்கு ஏற்ற வகையில் ஜிஎஸ்800 அதாவது 800 கிலோ எடை பிரிவில் வாகனங்களை தேர்வு செய்து உள்ளதால் புதிய சஃபாரி ஸ்டோரம் தேர்வு பெற்றுள்ளது. மேலும் கடந்த வருடத்தில் டாடா மோட்டார்சின் பாதுகாப்பு வாகன பிரிவு 1239 மல்டிஆக்சில் (6×6) டிரக்குகளுக்கான ஆர்டரை ரூ.900 கோடி மதிப்பில் பெற்றிருந்தது.
அடுத்த சில நாட்களில் விலை அறிவிக்கப்பட உள்ள புதிய 2021 கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால்…
5 இருக்கை கிரெட்டா காரின் அடிப்படையிலான 6 மற்றும் 7 இருக்கை பெற்றதாக ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி என்ற பெயரில்…
இரு வண்ண கலவை நிறத்தை பெற்ற புதிய 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.5.73 லட்சம் முதல் அதிகபட்சமாக…
சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற டொயோட்டா RAV4 க்ராஸ்ஓவர் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற…
பியாஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அபே E-City FX, E-Xtra FX (Fixed Battery) எலக்ட்ரிக் ஆட்டோ பயணிகள் மற்றும் சுமை…
இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற ஹேட்ச்பேக் கார்களில் முதன்மையாக விளங்கும் மாருதியின் ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. சிறிய…