Automobile Tamilan

உலகின் முதல் டபுள் டெக்கர் எலக்ட்ரிக் பஸ்

லண்டனில் வரும் அக்டோபர் உலகின் முதல் டபுள் டெக்கர் எலக்ட்ரிக் பஸ் இயங்க தொடங்குகின்றது . டபுள் டெக்கர் எலக்ட்ரிக் பஸ் சுற்றுசூழலக்கு உற்ற நண்பனாக விளங்கும்.
டபுள் டெக்கர் எலக்ட்ரிக் பஸ்

இங்கிலாந்தின் லண்டன் மாநகரில் தொடர்ந்து சுற்றுசூழல் மாசுபாட்டினை குறைப்பதற்க்காக பொது போக்குவரத்தில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன குறிப்பாக ஹைபிரிட் பேருந்து , மனித கழிவில் இயங்கும் பேருந்து , சாதரன எலக்ட்ரிக் பேருந்து போன்றவற்றை லண்டன் மாநகரம் செயல்படுத்தி வருகின்றது.

முழுதும் பேட்டரியின் உதவியுடன் இயங்க உள்ள இந்த பேருந்துகள் வரும் 2020ம் ஆண்டுக்குள் உலகின் முன்னணி 24 சர்வதேச நகரங்களில் 40,000 எலக்ட்ரிக் டபுள் டெக்கர் பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

லண்டன் மாநகரின் ரூட்.எண் 16 அதாவது க்ரிக்கிள்வுட் முதல் விக்டோரியா நிலையம் வரை இயக்க உள்ளனர். இதற்க்கான டபுள் டெக்கர் எலக்ட்ரிக் பேருந்துகளை வால்வோ , ரைட் பஸ் , ஆப்ட்ரா மெர்சிடிஸ் இவோ மற்றும் அலெக்சாண்டர் டேனிஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்க உள்ளன.

World’s first double-decker Electric bus to arrive in London this october 2015

Exit mobile version