Automobile Tamil

க்விட் காரின் உற்பத்தி மேலும் அதிகரிப்பு – மாதம் 10,000 கார்கள்

சென்னை ரெனோ-நிசான் கூட்டணி ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ரெனோ க்விட் கார் உற்பத்திகாக இரண்டு ஷிப்டுகளில் இருந்து மூன்று ஷிப்டுகளாக ரெனோ நிறுவனம் உயர்த்தியுள்ளது. மாதம் 10,000 க்விட் கார்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

renault kwid sideview

ஆல்ட்டோ 800 , இயான் போன்ற கார்களுக்கு போட்டியாக அமைந்துள்ள க்விட் 1.25,000க்கு மேற்பட்ட முன்பதிவினை கடந்துள்ள நிலையில் இதுவரை 50,000க்கு மேற்பட்ட கார்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணிகள் நடந்த வரும் ரெனோஆலையில் உற்பத்தி அடுத்த சில நாட்களில் தொடங்க உள்ளது. க்விட் காரில் 54பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 799சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டடுள்ளது. ரெனோ க்விட் மைலேஜ் லிட்டருக்கு 25.17கிமீ ஆகும்.

அடுத்த சில மாதங்களில் க்விட் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மாடல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் ஆகியவற்றை அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு கொண்டு வர ரெனோ திட்டமிட்டுள்ளது.

மேலும் படிங்க ; டட்ஸன் ரெடி-கோ கார் அறிமுகம்

சமீபத்தில் ரெனோ நிறுவனம் ரெனோ செலக்‌ஷ்ன் என்ற பெயரில் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான முதல் விற்பனையகத்தினை பெங்களூரில் தொடங்கியுள்ளது. மேலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் 20 டீலர்களும் அடுத்த வருடத்துக்குள் 50 டீலர்களை திறக்க ரெனோ திட்டமிட்டுள்ளது.

Exit mobile version