சென்னையில் 2016 பிஎம்டபுள்யூ X1 உற்பத்தி தொடக்கம்

சென்னை : பிஎம்டபிள்யூ இந்தியா பிரிவின் சென்னை ஆலையில் முதல் எக்ஸ்1 எஸ்யூவி கார் ஒருங்கினைக்கப்பட்டு வெளியாகியுள்ளது. 2016 பிஎம்டபுள்யூ X1 கார் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது.

Dr.-Jochen-Stallkamp-MD-BMW-Plant-Chennai-all-new-BMW-X1

இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள எக்ஸ்1 காரில் மூன்று விதமான வேரியண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவை தி எக்ஸ்பெடிஷன், எக்ஸ்லைன் மற்றும் எம் ஸ்போர்ட் ஆகும்.

முந்தைய மாடலைவிட முற்றிலும் மேம்படுத்தப்பட்ட மாடலாக வந்துள்ள 2016 பிஎம்டபுள்யூ எக்ஸ்1 காரில் மிக அகலமான பிஎம்டபுள்யூ பாரம்பரிய கிரில் , எல்இடி முகப்பு விளக்கு போன்றவற்றை பெற்றுள்ளது. உட்புறத்தில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்ட்ம் , ஏக்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் , ஸ்டாப் & கோ செயல்பாடு என பலவற்றை பெற்றுள்ளது.

தொடக்கநிலை சொகுசு எஸ்யூவி கார் மாடலான பிஎம்டபிள்யூ X1 காரில் இரு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் ஆப்ஷன் சர்வதேச அளவில் விற்பனையில் உள்ள நிலையில் இந்தியாவில் முதற்கட்டமாக 187 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் ட்வீன்பவர் டர்போ டீசல் மாடல் விற்பனையில் உள்ளது. இதன் இழுவைதிறன் 400Nm ஆகும்.

தி எக்ஸ்பெடிஷன், எக்ஸ்லைன் ஆகிய வேரியண்ட்கள் 0 முதல் 100 கிமீ வேகத்தினை எட்ட 7.8 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். எம் ஸ்போர்ட் வேரியண்ட் 0 முதல் 100 கிமீ வேகத்தினை எட்ட 7 விநாடிகள் எடுத்துக்கொள்ளும்.

Exit mobile version