டாடா ஏஎம்டி பஸ்கள் விற்பனைக்கு வந்தது

ரூபாய் 21 லட்சம் ஆரம்ப விலையில் டாடா ஏஎம்டி பஸ்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 9-12 மீட்டர் பிரிவில் உள்ள டாடா ஸ்டார்பஸ் மற்றும் டாடா அல்ட்ரா என இரு ஏஎம்டி மாடல்கள் வந்துள்ளது.

 

டாடா ஏஎம்டி பஸ்கள்

ஆட்டோமேட்டேட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் எனப்படுகின்ற ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட  ஸ்டார்பஸ் மற்றும் அல்ட்ரா பிராண்டில் மிக எளிதாக நகர்புற சாலைகளில் கையாளும் திறனை வெளிப்படுத்துவடன் கூடுதலாக 3 சதவீத எரிபொருள் சிக்கனத்தை பெற்றுள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

நவீன தலைமுறை நுட்பங்களை பெற்றதாக வந்துள்ள ஏஎம்டி பேருந்துகள் மேனுவல் ,ஆட்டோமேட்டிக் வசதியுடன் பவர் மற்றும் எக்னாமிக் என இருவிதமான மோடுகளை கொண்டதாக உள்ளது. இந்த பேருந்து கியர்பாக்சில் இடம்பெற்றுள்ள ஆட்டோமேட்டிக் கியர் டிடெக்சன் வசதியின் வாயிலாக வாகனத்தை டார்க் தேவைப்படுவதற்கு ஏற்ப கியரை தானாகவே மாற்றிக் கொண்டு செயல்படும், மேலும் சாலை சரிவு மற்றும் எடை போன்ற சமயங்களிலும் ஒட்டுநர்கள் சிரமமின்றி வாகனத்தை இயக்கலாம்.

9-12 மீட்டர் நீளமுள்ள பேருந்துகளான டாடா ஸ்டார்பஸ் மற்றும் டாடா அல்ட்ரா என இரு பிராண்டு மாடல்களின் இருக்கை அளவு 23 முதல் 54 வரை ஆகும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஏஎம்டி நுட்பம் டாடா மற்றும் வேப்கோ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

 

இந்த ரேஞ்சு பேருந்துகள் மைக்ரோ பஸ், இன்டர்சிட்டி, பள்ளி, டூரிஸ்ட் போன்ற சேவைகளுக்கு பயன்படுத்தலாம். டாடா ஏஎம்டி பஸ்கள் ஆரம்ப விலை ரூபாய் 21 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் ஆகும்.

Exit mobile version