Automobile Tamilan

டாடா கைட் கார் டீசர் வெளியீடு

டாடா மோட்டார்ஸ் கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி யை சர்வதேச பிராண்ட் விளம்பர தூதுவரக நியமித்துள்ள நிலையில் டாடா கைட் மாடலின் டீசரை வெளியிட்டுள்ளது.
a8be5 tata motors lionel messi

டிசம்பர் முதல் வாரத்தில் விற்பனைக்கு வரலாம் எதிர்பார்க்கப்படும் டாடா கைட் மாடலின் முதல் டீசர் மற்றும் தொலைக்காட்சி டீசரை வெளியிடப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள ஹேட்சேபேக் கார் டீசரில் முகப்பு கிரில் , கைப்பிடி , முகப்பு விளக்கு , டெயில் விளக்கு போன்றவை காட்சியளிக்கின்றது.  டாடா கைட் மிகவும் பிரிமியமாக வீடியோவில் காட்சிளிக்கின்றது.  போல்ட் மற்றும் ஸெஸ்ட் காரில் உள்ளதை போன்ற கிரிலினை பெற்றுள்ளது.

இந்த மாடலில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.3லிட்டர் ஃபியட் என்ஜின் பொருத்தப்படலாம். மேலும் 5 வேக மெனுவல் மற்றும் ஏஎம்டி ஆப்ஷனில் கைட் வரலாம்.

நவம்பர் இறுதியிலோ அல்லது டிசம்பர் முதலிலோ டாடா கைட் விற்பனைக்கு வரலாம். இதன் விலை ரூ.3.50 லட்சத்தில் தொடங்கலாம்.

        

Exit mobile version