Home Auto News

பிஎம்டபிள்யூ ஐ8 ஸ்போர்ட்ஸ் கார் விரைவில்

பிஎம்டபிள்யூ கார் நிறுவனத்தின் பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார் வரும் பிப்ரவரி மாதம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. மிக குறைவான எடை கொண்ட ஐ8 கார் மிக சிறப்பான பெர்பாஃர்மன்ஸ் காராக விளங்குகின்றது.

முழுதாக கட்டமைக்கப்பட்ட காராக இறக்குமதி செய்யப்படுவதால் ஐ8 காரின் விலை ரூ. 2 கோடியாக இருக்கும் மிக நேர்த்தியான தோற்றத்தினை பெற்றுள்ள  ஐ 8 கார் கார்பன் ஃபைபரால் உருவாக்கி உள்ளதால் இதன் எடை வெறும் 1485 கிலோ மட்டுமே.

BMW i8

1.5 லிட்டர் பெட்ரோல் விசைப்பொறி மற்றும் மின்சார மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் என்ஜின் 228பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் மேலும் எலக்ட்ரிக் மோட்டார் 129பிஎச்பி ஆற்றல் தரவல்லதாகும், இரண்டும் இனைந்து 357 பிஎச்பி ஆற்றலை தரும்.

எலக்ட்ரிக் மோட்டார் மூலம் மட்டுமே 37கிமீ பயணிக்க முடியும். மேலும் அதிகபட்சமாக மணிக்கு 120கிமீ வேகத்தில் செல்ல முடியும்.

0-100கிமீ வேகத்தினை வெறும் 4.4 விநாடிகளில் எட்டிவிடும். வரையறுக்கபட்ட உச்சகட்ட வேகம் மணிக்கு 250கிமீ ஆகும்.

BMW i8 hybrid sports car India launch

Exit mobile version