பெனெல்லி 750சிசி பைக் படங்கள் வெளியானது

பெனெல்லி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் BJ750GS என்ற குறியீட்டு பெயரில் உருவாகி வரும் 750சிசி மோட்டார்சைக்கிள் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. டிஎன்டி899 பைக்கின் அடிப்படையில் மாறுபட்ட மாடலாக விளங்குகின்றது.

இத்தாலியின் பெனெல்லி மோட்டார்சைக்கிளின் 750சிசி பைக் 100 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய என்ஜினை பெற்றிருக்கும். டிஎன்டி899 பைக்கிற்கு கீழாக நிலை நிறுத்தப்பட உள்ள 750சிசி பைக் மிக சிறப்பான ஸ்டைலிங் அம்சங்களுடன் நேர்த்தியான நேக்டு ஸ்போர்ட்ஸ் பைக்காக விளங்கும்.

வருகின்ற 2016 EICMA கண்காட்சியில் புதிய பெனெல்லி 750சிசி பைக் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 750சிசி பிரிவில் உள்ள பல பைக்குகளுக்கு நேரடியான போட்டி மாடலாக சவாலான விலையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவில் டிஎஸ்கே நிறுவனத்துடன் இணைந்து பெனெல்லி மோட்டார்ஸ் செயல்பட்டு வருகின்றது. மிக வேகமான வளர்ச்சி அடைந்து வரும் பெனெல்லி பைக்குகள் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பினை பெற்றுள்ளது.

 

Exit mobile version