Site icon Automobile Tamilan

மதுரையில் டாடா மோட்டார்சின் வர்த்தக வாகன டீலர் திறப்பு

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய வர்த்தக வாகன சேவை பிரிவினை மதுரையில் வெற்றி மோட்டார்ஸ் தொடங்கியுள்ளது.  3S வசதி கொண்டுள்ள டாடாவின் வர்த்தக வாகன சேவை மையத்தில் விற்பனை , சர்வீஸ் மற்றும் உதிரிபாகங்கள் கிடைக்கும்.

4000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள வெற்றி மோட்டார்ஸ் டீலரின் வாயிலாக மதுரை , திண்டுக்கல் , தேனி மற்றும் விருதுநகர் போன்ற மாவட்டங்கள் பயன்பெறும். தேசிய நெடுஞ்சால் 7யில் அமைந்துள்ள வெற்றி மோட்டார்ஸ் டீலரிடம் 8 பழுது நீக்குதலுக்கான பே , விபத்தில் சிக்கிய வாகனங்களுக்கு 2 பே போன்றவற்றுடன் சராசரியாக ஒரு நாளில் 30 வாகனங்களை பராமரிக்கும் திறனை பெற்று விளங்குகின்றது.

எங்கள்  வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கும் வகையில் எங்களுடைய சேவைகளை புதுப்பித்து வருகின்றோம். வெற்றி மோட்டார்ஸ் வாயிலாக 13வது வர்த்தக வாகனங்களுக்கான டீலரை மதுரையில் தொடங்கப்பட்டுள்ளதாக வர்த்தக வாகன பிரிவின் எக்ஸ்கூட்டிவ் இயக்குநர் திரு. ரவி தெரிவித்துள்ளார்.

வெற்றி மோட்டார்ஸ் நிர்வாக இயக்குநர் திரு. தமிழ் செல்வம் கூறுகையில் வெற்றி குழுமம் 1991 முதல் சிறந்த அனுபவத்துடன் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக மதுரையில் இயங்குவருகின்றது. தமிழ்நாட்டின் மிக நம்பகமான டீலராக விளங்குகின்றது என தெரிவித்துள்ளார்.

Exit mobile version