Automobile Tamilan

ரெனோ க்விட் கிளைம்பர் வருகை விபரம்

இந்தியாவின் தொடக்கநிலை வாகன சந்தையில் மிக வேகமாக வளர்ந்து வரும் ரெனோ க்விட் காரில் புதிதாக க்விட் கிளைம்பர் மாடல் அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வருவதனை உறுதி செய்யும் வகையில் நுட்ப விபரங்கள் அடங்கி தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரெனோ க்விட் கிளைம்பர்

0.8 லிட்டர் ,1 லிட்டர் மற்றும் ஏஎம்டி போன்ற மாடல்களில் விற்பனையில் உள்ள க்விட் காரில் கூடுதலாக கிளைம்பர் மற்றும் ரேசர் போன்ற கான்செப்ட் மாடல்களை 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் ரெனால்ட் அறிமுகம் செய்திருந்தது.

சாதரன மாடல்களில் இருந்து வித்தியாசத்தை வெளிப்படுத்தும் வகையில் கூடுதலான தோற்ற மாற்றங்களை பெற்றதாக விளங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதே போன்ற வெளிதோற்ற அமைப்பினை பெற்று வந்துள்ளது. வெளியாகியுள்ள நீல வண்ணத்திலான க்விட் காரில் ஒஆர்விஎம் , ரூஃப் ரெயில்கள் , முன்பக்க பம்பர் கிளாடிங் போன்றவற்றில் ஆரஞ்சு வண்ணத்தை பெற்றுள்ளது. 15 அங்குல அலாய் வீல் , கிளைம்பர் பேட்ஜ் மற்றும் ஸ்டிக்கரிங் போன்றவற்றை பெற்றதாக விளங்கும்.

இன்டிரியரிலும் ஆரஞ்சு வண்ணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட அசென்ட்ஸ் ,கருப்பு வண்ண சென்ட்ரல் கன்சோல் ,ஹெட்ரெஸ்ட் போன்றவற்றை பெற்றதாக விளங்குகின்றது.

என்ஜின் ஆப்ஷன் குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை. க்விட் கிளைம்பர் காரில் 67.06 bhp ஆற்றல் மற்றும் 91 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் SCe பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றிருக்கலாம். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனும் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது. ரெனோ க்விட் 1.0லி மைலேஜ் லிட்டருக்கு 23.07 கிலோமீட்டர் ஆகும்.

பிரவுச்சர் படங்கள் உதவி – Autosarena

Exit mobile version