• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

சுவாரஸ்யமான ஆட்டோமொபைல் செய்திகள் – Tamil news

by MR.Durai
28 October 2015, 9:16 am
in Auto News, Wired
0
ShareTweetSend

உலக ஆட்டோமொபைல் வரலாற்றில் ஆச்சரியங்களை ஏற்படுத்தி சில முக்கியமான விபரங்களை இந்த செய்தி தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

முதல் கார்
முதல் கார்

1.  முதல் கார்

  • நீராவி முலம் இயங்கும் ஆட்டோமொபைல் டிராலி 1768 ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டது.
  • 1807ம் ஆண்டு முதல் ஐசி என்ஜின் வாகனம் அதாவது ஹைட்ரஜன் மூலம் இயங்கும் வாகனம் உருவாக்கப்பட்டது.
  • 1886 ஆம் ஆண்டு உலகின் முதல் ஆட்டோமொபைல் பெட்ரோல் கார் காரல் பென்ஸ் அவர்களால் வடிவமைக்கப்பட்டது.
  • 1888 ஆம் ஆண்டு உலகின் முதல் எலக்ட்ரிக் கார் வடிவமைக்கப்பட்டது.

2. முதல் ரேஸ்

முதல் ஆட்டோமொபைல் ரேஸ் 1895ம் ஆண்டில் அமெரிக்காவின் சிக்காகோ நகரில் நடைபெற்றது. இதில் சார்லஸ் டீயூரியோ வெற்றி பெற்றார். இவரின் சராசரி வேகம் மணிக்கு 11கிமீ ஆகும். 87 கிமீ தூரத்தினை 7 மணி நேரம் 53 நிமிடங்களில் கடந்துள்ளார்.

3. முதல் விபத்து

1769 ஆம் ஆண்டு முதல் வாகன விபத்து நடந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

4. முதல் உயிரிழப்பு

1896ம் ஆண்டு நடந்த முதல் சாலை விபத்தின்பொழுது சர்ரே என்ற பெண்மணி உயிரழந்தார். இவர் சாலையை கடக்கும்பொழுது விபத்து ஏற்பட்டுள்ளது. 1899ம் ஆண்டு காரில் பயணித்தவர் உயிரிந்தார்.

5. அதிக வருடம்

  • 1928ம் ஆண்டு ரோல்ஸ்ராய்ஸ் ரோட்ஸ்டார்  காரை அலென் ஸ்விஃப்ட் என்பவர் 82 வருடங்களாக ஓட்டியுள்ளார்.
  • இதுவரை தயாரிக்கப்பட்ட ரோல்ஸ்ராய்ஸ்  கார்களில் 75 சதவீத  கார்கள் இன்னும் இயங்கி கொண்டிருக்கின்றன.
allen swift

6. குள்ளமான கார்

உலகின் மிக உயரம் குறைவான காரை பெர்ரி வாட்கின்ஸ் என்பவர் பிளாட்மொபைல் என்ற பெயரில் வடிவமைத்துள்ளார். பிளாட்மொபைல் உயரம் வெறும் 19 இஞ்ச் மட்டுமே.

7. புரட்சி கார்

உலகின் புரட்சிகரமான கார் மாடல் என்றால் அது ஃபோர்ட் மாடல் டி கார்தான் ஹென்ரி ஃபோர்டு அவர்களால் வடிவமைக்கப்பட்ட மாடல் டி 1916ம் ஆண்டில் உலகில் விற்பனையான மொத்த கார்களில் 55 சதவீத பங்கினை பெற்றிருந்தது. இதுவரை இந்த சாதனை முறியடிக்கப்படவில்லை.

8. தடை

  • சிவப்பு நிற கார்களை சீனாவின் சாங்காய் பகுதியில் தடை செய்யப்பட்டுள்ளது.
  • இங்கிலாந்தில் நிற்கும் கார்களில்  ஹார்ன் அடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.  மீறினால் 30 பவுண்ட் அபாரதம் வசூலிக்கப்படும்.
  • அழுக்கான காரை ரஷ்யா சாலைகளில் இயக்கினால் சட்டப்படி  கிரிமினல் குற்றமாகும்.
  • சுவிஸ் நாட்டில் கார் கதவுகளை படாரென சத்தத்துடன் மூடினால் தண்டனைக்குரியதாகும்.

9. பயணம்

  • நிலவுக்கு பூமியிலிருந்து 96கிமீ வேகத்தில் நில்லாமல் பயணித்தால் 6 மாதங்களில் நிலவை சென்றடையலாம்.
  • பூமியிலிருந்து  சூரியனுக்கு பாதையிருந்து காரில் பயணித்தால் 150 வருடங்களில் சென்றடைய முடியுமாம்.

10. எண்கள்

  • உலகில் ஒரு நாளைக்கு 1,65,000 கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றது.
  • உலகில் எந்த நேரத்திலும் 1 பில்லியன் கார்கள் இயங்கி கொண்டிருக்கின்றன
  • சராசரியாக ஒரு காரில் 30,000 பாகங்கள் உள்ளன.
  • உலகின் முதன்மையான டொயோட்டா கார் நிறுவனம் ஒரு நாளில் 13,000 கார்கள் உற்பத்தி செய்கின்றது.
  • ஃபெராரி சூப்பர் கார் நிறுவனம் ஒரு நாளைக்கு 14 கார்களை உற்பத்தி செய்கின்றது.
  •  காரின் உள்ளே நறுமனம் வருவதற்க்காக 50 விதமான பொருட்கள் சேர்க்கப்படுகின்றது.

Interesting facts about automobile in tamil news

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version