புதிய இன்னோவா மற்றும் ஃபார்ச்சூனர் GD என்ஜின் விபரம்
MR.Durai
டொயோட்டா இன்னோவா மற்றும் ஃபார்ச்சூனர் எஸ்யூவி கார்களின் புதிய தலைமுறை மாடல்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது. புதிய இன்னோவா மற்றும் ஃபார்ச்சூனர் கார்களில் புதிய GD என்ஜின் பொருத்தப்பட உள்ளது.
புதிய டொயோட்டா GD என்ஜின் மிக அதிகபட்ச வெப்ப திறனை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 15 % எரிபொருள் சிக்கனம் , 25 % கூடுதல் முறுக்கு விசை மற்றும் அதிகபட்ச ஆற்றலை வழங்கும்.
2.8 லிட்டர் மற்றும் 2.4 லிட்டர் ஜிடி என்ஜின்கள் 2016 ஆம் ஆண்டுக்குள் 90 நாடுகளில் விற்பனை செய்யப்படும் கார்களில் பொருத்தப்பட்டிருக்கும் இதில் இந்தியாவும் அடங்கும். இந்த என்ஜின்கள் மிக குறைவான NOx (நைட்ரஜன் ஆக்சைடு) வாயுவை வெளிப்படுத்தும்.
டொயோட்டா GD என்ஜின் விபரம்
2.8 லிட்டர் 1GD-FTV என்ஜின் மற்றும் 2.4 லிட்டர் 2GD-FTV என்ஜின் என இரண்டிலும் உலகில் முதன்முறையாக தெர்மோ ஸ்விங் வால் இன்ஷ்லேசன் தொழில்நுட்பம் (Thermo Swing Wall Insulation Technology – TSWIN) பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நுட்பத்தின் மூலம் 44 % வெப்ப திறன் ஆற்றலை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
முதன்முதலாக டொயோட்டா ஜிடி என்ஜினில் யூரியா செலக்ட்டிவ் கேட்டலைட்டிக் ரிடக்ஷன் (urea Selective Catalytic Reduction -SCR) பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 99 % NOx (நைட்ரஜன் ஆக்சைடு) வாயுவை கட்டுப்படுத்தும்.
2.8 லிட்டர் ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரிலும் 2.4 லிட்டர் இன்னோவா காரிலும் பொருத்தப்பட்டிருக்கும். புதிய இன்னோவா இந்த வருடத்தின் இறுதியிலோ அல்லது அடுத்த வருடத்தின் முதலிலோ விற்பனைக்கு வரும். புதிய ஃபார்ச்சூனர் எஸ்யூவி அடுத்த வருடத்தின் மத்தியில் வரும்.