Automobile Tamilan

ரெனோ லாட்ஜி எம்பிவி கார் ஏப்ரல் 9 முதல்

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரெனோ லாட்ஜி எம்பிவி கார் வரும் ஏப்ரல் 9ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

டஸ்ட்டர் எஸ்யூவிக்கு பிறகு மிகவும் எதிர்பார்க்கப்படும் காரான ரெனோ லாட்ஜி அதிகப்படியான இடவசதி கொண்ட எம்பிவி காராக விற்பனைக்கு வரவுள்ளது.

ரெனோ லாட்ஜி

முகப்பில் 3 ஸ்லாட்களுக்கு மத்தியில் ரெனோ இலச்சினை பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் உட்புறத்தில் பெரும்பாலான டஸ்ட்டர் பாகங்களை கொண்டுள்ளது.

டஸ்ட்டரை போன்றே இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷனில் லாட்ஜி கிடைக்கும். அவை 84பிஎச்பி மற்றும் 108.5பிஎச்பி என இரண்டு விதமான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் கே9கே டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.

84பிஎச்பி ஆற்றல் தரும் என்ஜினில் 5 வேக மெனுவல் டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மைலேஜ் லிட்டருக்கு 21கிமீ ஆகும்.
108.5பிஎச்பி ஆற்றல் தரும் என்ஜினில் 6 வேக மெனுவல் டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மைலேஜ் லிட்டருக்கு 19.98கிமீ ஆகும்.

முதற்கட்டமாக உயர்ரக மாடல் மட்டுமே விற்பனைக்கு வரவுள்ளது. இரட்டை காற்றுப்பைகள் , ஏபிஎஸ் , இபிடி , போன்ற பாதுகாப்பு அம்சங்களும் செயற்க்கைகோள் தொடர்பு நேவிகேஷன் அமைப்பு , பூளூடூத் தொடர்பு , ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் ரியர் வியூ கேமரா போன்ற வசதிகளை கொண்டிருக்கும்.

ரெனோ லாட்ஜி கார் விலை ரூ.9-13லட்சத்திற்குள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version