Automobile Tamil

2017 முதல் ரெனோ கார்களின் விலை 3 % உயர்வு

வருகின்ற 2017 ஆம் ஆண்டு முதல் ரெனோ நிறுவனத்தின் அனைத்து கார் மாடல்களும் 3 சதவீத விலை உயர்வினை சந்திக்கின்றது. விலை உயர்வில் பிரசத்தி பெற்ற ரெனோ க்விட் காரும் அடங்கும்.

ரெனோ கார் நிறுவனம் இந்தியாவில் க்விட் , பல்ஸ் , ஸ்கேலா , டஸ்ட்டர் ,லாட்ஜி , ஃபுலீயன்ஸ் மற்றும் கோலியஸ் போன்ற மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.இவற்றில் டஸ்ட்டர் மற்றும் க்விட் என இரு கார்களும் பிரபலமாக உள்ளது.

விலை உயர்வு குறித்து இந்தியா பிரிவு ரெனால்ட் தலைமை செயல் அதிகாரி  கூறுகையில் ஸ்டீல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையால் கடந்த சில மாதங்களாகவே உற்பத்தி செலவீனங்கள் அதிகரித்து வருவதனால் அதனை ஈடுகட்டும் நோக்கில் வருகின்ற ஜனவரி 2017 முதல் 3 சதவீத விலை உயர்வினை அமல்படுத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் டொயோட்டா நிறுவனம் உற்பத்தி செலவு மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் 3 சதவீத விலை உயர்வை ஜனவரி முதல் அமல்படுத்த உள்ளதை தெரிவித்திருந்தது.

மேலும் பல நிறுவனங்கள் தங்களுடைய கார்களின் விலையை கனிசமாக உயர்த்த வாய்ப்புள்ளது.

Exit mobile version