Automobile Tamilan

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் பேருந்தை காட்சிப்படுத்திய பாரத் பென்ஸ்

Bharat Benz- Reliance Industries showcase hydrogen fuel cell intercity  luxury bus concept

பாரத் பென்ஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இணைந்து தயாரித்துள்ள நாட்டின் முதல் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் பேருந்தை காட்சிப்படுத்தியுள்ளது. கோவா மாநிலத்தில் நடைபெற்று வரும் 14வது Clean Energy Ministerial கருத்தரங்கில் காட்சிக்கு வைத்துள்ளது.

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் செல் மூலம் இயங்கும் சொகுசு இன்டர்சிட்டி கான்செப்ட் பஸ் டேங்கினை ஒரு முறை நிரப்பினால் 400 கிமீ வரை பயணிக்கும் திறன் கொண்டதாகும்.

Bharat Benz hydrogen Fuel Cell Bus

“குறிப்பிடத்தக்க உள்நாட்டு பாகங்கள் கொண்ட சர்வதேச கூட்டாளிகளின்” அதிநவீன நுட்பங்களைப் பயன்படுத்தி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸால் பேருந்துகான எரிபொருள் செல் சிஸ்டத்தை வடிவமைத்துள்ளது. எதிர்காலத்திற்கான மாற்றாக ஹைட்ரஜன் எரிபொருள்  நம்பகத்தன்மையை ஆராய்வதற்காக ஒரு மேம்பட்ட பொறியியல் ஆய்வினை மேற்கொள்வதற்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பாரத் பென்ஸ் கூற்றுப்படி, பேருந்து 127 கிலோவாட் மொத்த சிஸ்டம் பவரையும், 105 கிலோவாட் ஆற்றலை வழங்குகிறது, இது நகரங்களுக்கு இடையேயான பயன்பாடுகளுக்கு தற்போதைய டீசல் பேருந்தின் 300 ஹெச்பிக்கு சமம் என குறிப்பிடுகின்றது.

எதிர்காலத்தில் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக வர்த்தக வாகன சந்தையில் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் முக்கிய பங்காற்றும் என கருதப்படுகின்றது. பசுமை ஹைட்ரஜனை மேம்படுத்துவதற்காக 2.11 பில்லியன் அமெரிக்க டாலர் ஊக்கத் திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது.

இந்நிலையில் ஜனவரி 4, 2023 அன்று அங்கீகரிக்கப்பட்ட இந்தத் திட்டம், பசுமை ஹைட்ரஜன் சங்கிலியை உருவாக்குவதற்கு எட்டு லட்சம் கோடி ரூபாய் வரை முதலீட்டை ஈர்க்கும் வகையில் தொழில்துறைக்கு உதவும் நோக்கம் கொண்டது. கூடுதலாக, திட்டம் உலகின் பசுமை ஹைட்ரஜன் சந்தையில் 10 சதவீதத்தை இலக்காகக் கொண்டுள்ளது.

தற்போது ரூ.320 முதல் ரூ.330 வரை உள்ள பசுமை ஹைட்ரஜனின் விலையை 2030 ஆம் ஆண்டுக்குள் ரூ.160 முதல் ரூ.170 வரை குறைக்க அரசு வழங்கும் ஊக்கத்தொகை உதவும்.

பாரத் பென்ஸ் மற்றும் ரிலையன்ஸ் இணைந்து தயாரித்துள்ள பேருந்து அடுத்த 12 மாதங்களுக்குள் முழுமையான உற்பத்தி நிலையை எட்டி சோதனை ஓட்டத்துக்கு தயாராகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version