Automobile Tamilan

1 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் சிறந்த ரேஞ்ச் தரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தேர்வு செய்யலாமா ?

rs.1 lakh budget-friendly electric scooter and onroad price

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை கூடுதலாக அமைந்திருந்தது, ஆனால் காலம் மாற துவங்கியதனால் சவாலான விலையில் அதிக ரேஞ்ச் மற்றும் பல்வேறு நவீன வசதிகள் தாண்டி பொதுவான 30கிமீ முதல் 60 கிமீ தினசரி பயன்பாட்டுக்கு ஏற்றதாகவும் சார்ஜிங் மேம்பாடு எனவும் சாத்தியமாகி உள்ளதால் ரூ.1,00,000 குறைந்த அல்லது சில ஆயிரங்கள் கூடுதலாக விலை கொடுத்தாலும் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தேர்வு செய்ய மிக தீவரமாக பலதரப்பட்ட பயனாளர்கள், விற்பனை எண்ணிக்கை, ஆன்லைன் மற்றும் சமூக பக்கங்கள் சில இடங்களில் AI உதவிக்கு கொண்டு ஆய்வு செய்து தயாரித்துள்ள கட்டுரையில் சிறந்த 5  மின்சார ஸ்கூட்டர்களை இப்பொழுது நாம் அறிந்து கொள்ளலாம்.

தினசரி பயன்பாடிற்கான ஸ்கூட்டர்

இருசக்கர வாகனங்கள் இன்றைக்கு அவசியமாக பெரும்பாலானோர் 20 முதல் 30 கிமீ தினசரி பயன்பாட்டிற்கும், கூடுதலாக ஒரு சிலர் 50 கிலோ மீட்டருக்கு கூடுதலாக பயன்படுத்தி வருகின்ற நிலையில், நாம் சராசரியாக 30-60 கிமீ ரேஞ்ச் வழங்கும் வகையில் அன்றாட பயன்பாடுகளுக்கு ஏற்றதாக தேர்வு செய்யும் பொழுது 2.2Kwh முதல் 3.5Kwh வரை உள்ள பேட்டரி ஆப்ஷனை கொண்ட மாடல்கள் சிறந்த தேர்வாக இருக்கலாம்.

குறிப்பாக, ஏதெரின் ரிஸ்டா , டிவிஎஸ் ஐக்யூப் , பஜாஜ் சேட்டக், ஹீரோ விடா VX2, டிவிஎஸ் ஆர்பிட்டர், பெரும்பாலும் சர்வீஸ் தொடர்பான பிரச்சனையால் ஓலா ஸ்கூட்டரை பலரும் தவிரக்கவே விரும்புகின்றனர். ஹோண்டா நிறுவனம் குறைந்த ரேஞ்ச் வெளிப்படுத்தும் அதேவேளையில் போட்டியாளர்களை விட கூடுதல் விலை என்பதனால் தவிர்த்துள்ளேன்.

ரேஞ்ச் எவ்வளவு தேவை?

தினசரி 30 கிமீ குறைவாக பயன்படுத்துவோர் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை சார்ஜிங் செய்ய வேண்டியிருக்கும் நிலையில், 50 கிமீ கூடுதலாக பயன்படுத்துவோர் தினமும் சார்ஜிங் செய்வதற்கு ஏற்ற வகையிலான வசதிகள் பெற்றிருப்பதுடன் விரைவு சார்ஜர் ஆப்ஷன் பெற்றிருக்கின்ற ரிஸ்டா, விடா VX2 போன்றவை கவனிக்கதக்கதாகும்.

குறிப்பாக ஆரம்ப நிலை ஐக்யூப் 2.2kwh இந்நிறுவனத்தால் 94 கிமீ IDC சான்றிதழ் பெற்றாலும் உண்மையான ரேஞ்ச் சராரியாக 70-75 கிமீ கிடைக்கின்றது.  மேலும் மற்ற மாடல்களான 3.1Kwh, 3.5kwh, 5.1kwh வரை வழங்குகின்றது.

விடா விஎக்ஸ்2 ஸ்கூட்டரில் ஆரம்நிலை பேட்டரி 2.2Kwh பெற்றுள்ள நிலையில் உண்மையான ரேஞ்ச் 70-72 கிமீ வரை கிடைகின்றது. கூடுதலாக 3.44kwh பேட்டரி ஆப்ஷனும் உள்ளது.

ரிஸ்டா ஸ்கூட்டரை பொறுத்தவரை கூடுதலான விலையில் இருந்தாலும் உண்மையான ரேஞ்ச் 100கிமீ வரை வெளிப்படுத்தும் 2.9Kwh மற்றும் 3.7Kwh பேட்டரியும் உள்ளது.

பஜாஜ் ஆட்டோவின் சேட்டக் 3.0Kwh மாடல் 115கிமீ ரேஞ்ச் வரை வெளிப்படுத்தும் நிலையில் டாப் வேரியண்டில் 3.5kwh வரை கொண்டுள்ளது.

இறுதியாக, டிவிஎஸ் மோட்டாரின் மற்றொரு புதிய மாடலான ஆர்பிட்டர் போட்டியாளர்களுக்கு இணையான விலையில் 3.5Kwh பேட்டரி பெற்று ரேஞ்ச் 120 கிமீ வரை வெளிப்படுத்தலாம்.

அட்டவணையில் மாடல் வாரியாக அதனுடைய ரேஞ்ச் மற்றும் பேட்டரியின் திறன் மற்றும் அதிகபட்ச வேகம் கொடுக்கப்பட்டுள்ள பேட்டரி சார்ஜிங் நேரம் உள்ளிட்டவற்றையெல்லாம் இங்கு வழங்கியுள்ளோம்.

தயாரிப்பாளர் பேட்டரி, ரேஞ்ச்
Ather Rizta (S,Z) பேட்டரி –  2.9 Kwh-3.7kwh, IDC ரேஞ்ச் – 123km-160km/charge , உண்மையான ரேஞ்ச் –  100-135 km, அதிகட்ச வேகம் – 80km/hr  சார்ஜிங் நேரம் (0-100%) – 8 hr 30 min
Vida VX2 பேட்டரி –  2.2 Kwh-3.44kwh, IDC ரேஞ்ச் – 94km – 145 km/charge , உண்மையான ரேஞ்ச் – 70-115 km, அதிகட்ச வேகம் – 80km/hr  சார்ஜிங் நேரம் (0-100%) – 3 hr 53 min
TVS iqube பேட்டரி –  2.2Kwh-5.3kwh, IDC ரேஞ்ச் – 95-212km/charge , உண்மையான ரேஞ்ச் –  74-165 km, அதிகட்ச வேகம் – 82km/hr  சார்ஜிங் நேரம் (0-80%) – 4 hr 12 min
Bajaj Chetak 3001 பேட்டரி –  3.0 Kwh 3.5Kwh, IDC ரேஞ்ச் – 127km-152km/charge , உண்மையான ரேஞ்ச் – 100-130 km, அதிகட்ச வேகம் – 73km/hr  சார்ஜிங் நேரம் (0-80%) – 3 hr 50 min
TVS Orbiter பேட்டரி –  3.5Kwh, IDC ரேஞ்ச் – 158km/charge , உண்மையான ரேஞ்ச் – 120-130 km, அதிகட்ச வேகம் – 68km/hr  சார்ஜிங் நேரம் (0-80%) – 4 hr 10 min

குறிப்பாக இந்த பட்டியலில் ரேஞ்ச் தொடர்பாக கவனிக்க வேண்டிய மாடலில் ஆர்பிட்டர் கூடுதல் கவனத்தை பெறகின்றது. அடுத்தப்படியாக பட்ஜெட் விலை மற்றும் வசதிகளில் விஎக்ஸ்2 கவனிக்க வேண்டியுள்ளது.

நவீன அம்சங்கள்

பொதுவாக நாம் தொகுத்துள்ள ஸ்கூட்டர்களில் ரிஸ்டா சற்று பிரீமியம் வசதிகளுடன் விளங்கும் நிலையில் பூட்ஸ்பேஸ், பேட்டரி வாரண்டி என பலவற்றை சிறப்பாக கொண்டுள்ளது, அதே நேரத்தில் விடா விஎக்ஸ்2 மாடலும் நவீன வசதிகள் பூட்ஸ்பேஸ் என அனைத்திலும் சிறப்பானதாக உள்ளது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மாடலும் பூட்ஸ்பேஸ், கிளஸ்ட்டர் வசதிகள் நிறங்கள், மெட்டல் பாடி ரெட்ரோ டிசைன் என பலவற்றை பெற்றுள்ளது.

அடுத்தப்படியாக, புதிதாக வந்துள்ள ஆர்பிட்டர் சற்று மாறுபட்ட டிசைன், தட்டையான இருக்கை, பூட்ஸ்பேஸ் கிளஸ்ட்டர், க்ரூஸ் கண்ட்ரோல் என பல நவீன அம்சங்ளுடன் விளங்குகின்றது. ஐக்யூப் மாடல் இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற பிரசத்தி பெற்ற மாடல் பலவசதிகளை டாப் வேரியண்டில் மட்டும் பெற்றுள்ளது.

சிறந்த 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ஒப்பீடு

குறிப்பாக இந்த விலை பட்டியலில் BAAS திட்டத்தில் கிடைக்கின்ற ரிஸ்டா மற்றும் விஎக்ஸ்2 மாடல்கள் விலை தனியாக கீழே வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக பேட்டரிக்கு தனியாக மாதந்திர வாடகையை செலுத்த வேண்டியிருக்கும்.

e-Scooter on-road Price
Ather Rizta ₹ 1,22,832- ₹1,60,143
Hero Vida VX2 ₹ 1,08,456- ₹1,18,546
TVS iqube ₹ 1,11,654 – ₹ 1,70,654
Bajaj Chetak ₹ 1,11,503 – ₹ 1,44,124
TVS Orbiter ₹ 1,08,534

(தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது)

ஹீரோ விடா விஎக்ஸ்2 BAAS விலை ரூ.44,490 முதல் ரூ.59,490 வரையும், ஏதெர் ரிஸ்டா ரூ.76,000 முதல் துவங்குகின்றது.

Exit mobile version