சுதந்திர தின பைக் ரைடு-ஐ ஏற்பாடு செய்தது டுகாட்டி

இந்தியாவின் 71-வது சுதந்திர தினம் வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு டுகாட்டி நிறுவனம், சுந்திர தின பைக் ரைடு-ஐ ஏற்பாடு செய்துள்ளது.
இந்த பயணத்தின் மூலம் நிதி திரட்டி அந்த நிதியை லோட்டஸ் பெடல் அறக்கட்டளைக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

லக்னோவில் உள்ள ஐஐஎம்-மில் மேலாண்மை பட்டம் பெற்று தற்போது அறக்கட்டளை நடத்தி வரும் குஷால் ராஜ் சக்ரவர்த்தி பேசுகையில், இந்த சுதந்திர தின பைக் ரைடு-டில்,, பங்கேற்க விரும்புபவர்களுக்காக, நாடு முழுவதும் உள்ள டீலர்ஷிப்களை கொண்டு டுகாட்டி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த பைக் ரைடு, சுதந்திர தினத்தன்று காலை ஆறு மணி தொடங்க உள்ளது. இந்த பைக் ரைடு-ல் டுகாட்டி ஓட்டுனர்கள் அனைவரும் பங்கேற்கலாம். இந்த பைக் ரைடு-ஐ நடத்துவதன் மூலம் டுகாட்டி நிறுவனம், இந்தியாவின் 71-வது சுந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளது என்றார்.