Home Auto News

புதிய மஹிந்திரா கேயூவி100 வருகை விபரம்

மஹிந்திரா நிறுவனத்தின் மினி எஸ்யூவி என்று அழைக்கப்படுகின்ற மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் இந்த வருடத்தின் இறுதி மாதங்களில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2017 மஹிந்திரா கேயூவி100

கடந்த சில மாதங்களாக பலேனோ ,ஐ20 போன்ற கார்களின் புதிய மாடல்கள் வரவினால் மாதம் சராசரியாக 2500 கார்களுக்கு மேல் விற்பனை ஆகிவந்த மஹிந்திரா கேயூவி100 விற்பனை சரிய தொடங்கியுள்ளதால் இதனை ஈடுகட்ட வேண்டிய நிலைக்கு மஹிந்திரா தள்ளப்பட்டுள்ளது.

எனவே மேம்படுத்தப்பட்ட தோற்ற அமைப்பு மற்றும் கூடுதல் வசதிகளை பெற்ற மாடலாக கேயூவி 100 கார் இந்த வருடத்தின் இறுதி மாதங்களில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய மாடலில் முன்பக்க பம்பர் உள்பட தோற்ற அமைப்பில் சில மாறுதல்களும் கையாளுமை திறன் அதிகரிக்கப்பட்டதாகவும் வரவுள்ளது.

விற்பனையில் உள்ள மாடலின் அதே பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இருக்க வாய்ப்பில்லை.   கேயூவி 100 எஞ்சின் விபரம் பின்வருமாறு ;-

82 bhp @ 5500 ஆர்பிஎம் யில் வழங்கும் 1198cc எம் ஃபால்கன் G80 பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 115 Nm 3500 முதல் 3600 ஆர்பிஎம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

 

77 bhp @ 3750 ஆர்பிஎம் யில் வழங்கும் 1198cc எம் ஃபால்கன் D75 டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 190 Nm 1750 முதல் 2250 ஆர்பிஎம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் KUV100  எஸ்யூவி காரில் பவர் மற்றும் இக்கோ மோட் உள்ளது.

அதிக மைலேஜ் தரும் டீசல் மைக்ரோ எஸ்யூவி காராக மஹிந்திரா கேயூவி100 விளங்குகின்றது. டீசல் மஹிந்திரா கேயூவி 100 எஸ்யூவி காரின் மைலேஜ் லிட்டருக்கு 25.83 கிமீ ஆகும். மேலும் பெட்ரோல் கேயூவி100 காரின் மைலேஜ் லிட்டருக்கு 18.15 கிமீ ஆகும்.

Exit mobile version