Automobile Tamilan

செப்டம்பர் 2019-ல் 25 % வீழ்ச்சியடைந்த மாருதி சுசுகி கார் விற்பனை

maruti-suzuki-s-presso

இந்தியாவின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசுகி நிறுவனத்தின் மாதந்திர கார் விற்பனையில் செப்டம்பர் 2019-ல் மொத்தம் 122,640 யூனிட்டுகள் விற்பனை ஆகியுள்ளது. இதில் உள்நாட்டு சந்தையில் 112,500 வாகனங்களும், 2,952 கார்களும் (டொயோட்டா கிளான்ஸா) மற்றும் 7,188 வாகனங்கள் ஏற்றுமதியும் செய்யப்பட்டுள்ளது.

இது செப்டம்பர் 2018 விற்பனை செய்யப்பட்ட 153,550 கார்களுடன் ஒப்பீடுகையில் ஒட்டுமொத்த உள்நாட்டு விற்பனை 24.8% வீழ்ச்சி அடைந்துள்ளது. மாருதி சுசுகியின் ஏற்றுமதி 7,188 ஆக 2019 செப்டம்பர் மாதம் பதிவு செய்திருந்தது. அதேவேளை முந்தைய ஆன்டின் செப்டம்பர் மாதத்தில் 8740 வாகனங்களை விற்றிருந்தது. இது முந்தைய ஆண்டை விட 17.8 சதவீத ஏற்றுமதி சந்தை வீழ்ச்சியாகும்.

ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோ, முந்தைய வேகன்ஆர் போன்ற தொடக்க நிலை சந்தையில் எஸ்-பிரெஸ்ஸோ மற்றும் வேகன்ஆர் தவிரத்து ஆல்ட்டோ விற்பனை எண்ணிக்கை வெறும் 20,085 ஆக மட்டும் பதிவு செய்துள்ளது.

யுட்டிலிட்டி வாகன சந்தையில் கிடைக்கின்ற எர்டிகா, விட்டாரா பிரெஸ்ஸா, XL6 மற்றும் ஜிபிஸி விற்பனை மட்டும் 0.5 % வீழ்ச்சி கண்டுள்ளது.

விற்பனை செய்யப்பட்ட மாடல்களின் விபரம் கீழே உள்ள அட்டவனையில் வழங்கப்பட்டுள்ளது.

முந்தைய மாதத்துடன் ஒப்பீடுகையில் மாருதி சுசுகி விற்பனை அதிகரித்துள்ளது..

Exit mobile version