Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

மாருதி XL6 காரின் சிறப்புகள் மற்றும் விமர்சனம்

by automobiletamilan
August 26, 2019
in Car Reviews
0
SHARES
0
VIEWS
ShareRetweet

xl6

மாருதி எக்ஸ்குளூசிவ் 6 என அறிமுகம் செய்யப்பட்டுள்ள XL6 பிரீமியம் எம்பிவி காரில் பல்வேறு வசதிகள் மற்றும் பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்துகின்ற BS6 பெட்ரோல் என்ஜின் போன்றவற்றுடன் ஆரம்ப விலை ரூபாய் 9.79 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

முன்பாக விற்பனையில் உள்ள எர்டிகா அமோகமான ஆதரவை பெற்ற மாடலாக விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நிலையில், மேலும் கூடுதலான வசதிகள் மற்றும் பிரீமியம் ஆப்ஷனை பெற்று எம்பவி மற்றும் சமீபத்தில் விற்பனைக்கு வந்த சில எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்படுள்ளது.

ஸ்டைலிஷான தோற்ற அமைப்பு

விற்பனையில் உள்ள மாடலை விட தோற்ற அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக முகப்பில் சிங்கிள் க்ரோம் பாருக்கு மத்தியில் வழங்கப்பட்டுள்ள சுசூகி லோகோவுடன் தேன்கூடு அமைப்பினை கிரில் வெளிப்படுத்துகின்றது. ஸ்டைலிஷான மற்றும் முரட்டு தன்மையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்ற மாருதி சுசுகி XL6 காரில் மிக நேர்த்தியான குவாட் எல்இடி ஹெட்லேம்ப்,  எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள், பாடி கிளாடிங் உள்ளிட்ட வசதிகள் மிதக்கும் வகையிலான ரூஃப், பின்புறத்தில் டூயல் டோன் கொண்டிருப்பதுடன் நேர்த்தியான டெயில் லைட் பெற்றதாக அமைந்துள்ளது.

ப்ளூ, காக்கி, வெள்ளை, சில்வர், கிரே மற்றும் ரெட் என மொத்தமாக 6 விதமான நிறங்களை பெற்றுள்ளது.

xl6 interior

பிளாக் இன்டிரியர்

இன்டிரியரில் 6 கேப்டன் இருக்கைகள் வழங்கப்பட்டு மாருதியின் 7.0 இன்ச் ஸ்மார்ட் பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டிருப்பதுடன், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட வசதிகளுடன் ப்ளூடூத், USB, AUX-in , க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற அம்சங்களை கொண்டதாக அமைந்திருக்கிறது. கூடுதலாக எக்ஸ்எல்6 ஆல்பா வேரியண்டில் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, லெதர் இருக்கைகள், மற்றும் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் போன்றவற்றை பெற்றிருக்கின்றது.

பிஎஸ் 6 பெட்ரோல் என்ஜின்

மாருதியின் XL6 காரில் பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான 1.5 லிட்டர் ஸ்மார்ட் ஹைபிரிட் SHVS பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 105 பிஎஸ் (77KW) பவருடன் 138 என்எம் டார்க் வழங்குகின்றது. இதில் 4 வேக டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் மற்றும் 5 மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்க உள்ளது.

இந்த என்ஜினுடன் வழங்கப்பட்டுள்ள இன்டெகிரேட்டெட் ஸ்டார்ட்டிங் ஜென்ரேட்டர் உடன் வழங்கப்பட்டுள்ள லித்தியன் அயன் பேட்டரி பெற்றதாக அமைந்துள்ளது. இதன் மூலம் சிறப்பான வகையில் எரிபொருள் சிக்கனத்தை வழங்குவதுடன் கூடுதலான வேகத்தை வழங்க உதவுகின்றது.

எக்ஸ்எல்6 காரின் மைலேஜ் லிட்டருக்கு 5 வேக மேனுவல் மாடலுக்கு 19.01 கிமீ மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல் அதிகபட்சமாக 17.99 கிமீ தரவல்லத்தாகும்.

மாருதி சுஸுகி XL6

வசதிகள்

XL6 Alpha வேரியண்டில் க்ரூஸ் கண்ட்ரோல், ஏபிஎஸ் உடன் கூடிய இபிடி, எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் ஹீல் அசிஸ்ட் (ஆட்டோமேட்டிக்), ரியர் பார்கிங் சென்சார், கீலெஸ் என்ட்ரி அன்டு கோ, 7.0 இன்ச் ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், பவர் விண்டோஸ், ஸ்டீயரிங் மவுன்டேட் கன்ட்ரோல், 15 இன்ச் அலாய் வீல் போன்ற பல்வேறு வசதிகளை பெற்றுள்ளது.

XL6 Zeta வேரியண்டில் ஆல்பா வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, லெதர் இருக்கைகள், லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் உடன் ஃபாலோ மீ ஹோம் வசதி உள்ளிட்டவற்றை பெற்றுள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்

சுசூகியின் டெக்ட் பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டு அடிப்படை பாதுகாப்பு அம்சங்களாக ஏர்பேக், இபிடி உடன் ஏபிஎஸ் போன்றவசதிகள் இடம்பெற்றுள்ளது.

விலை

சாதாரண மாடலை விட கூடுதலான விலையில் அமைந்திருந்தாலும் பல்வேறு வசதிகள் பெற்றிருப்பது மிகுந்த கவனத்தைப் பெறுகின்றது.

Maruti Suzuki XL6 Zeta – ரூ.9,79,689

Maruti Suzuki XL6 Zeta (AT) – ரூ. 10,89,689

Maruti Suzuki XL6 ALpha – ரூ. 10,36,189

Maruti Suzuki XL6 ALpha (AT) – ரூ.11,46,189

xl6 rear

போட்டியாளர்கள்

இந்த மாடல் ரெனோ லாட்ஜி, எர்டிகா, மற்றும் மஹிந்திரா மராஸ்ஸோ உட்பட பிரீமியம் இன்னோவா கிரிஸ்டா போன்ற மாடல்களுக்கு போட்டியாக விளங்க உள்ளது

ஆட்டோமொபைல் தமிழன் பரிந்துரை

நீண்ட தொலைவு பயணம் இன்னோவா கிரிஸ்டா காரை விட குறைவான விலை, ஸ்டைலிஷான தோற்றம், பவர்ஃபுல்லான பெட்ரோல் என்ஜின், தாராளமான இடவசதி போன்றவை கவனத்தைப் பெற்றிருந்தாலும், மிக குறைவான கனெக்ட்டிவிட்டி வசதிகள், டீசல் என்ஜின் இல்லாதவை குறிப்பிடதக்கதாக அமைந்திருக்கின்றது.

Tags: Maruti Suzuki XL6மாருதி சுசுகி XL6
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan