மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் விமர்சனம்

0

maruti s-presso

மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் பிரெஸ்ஸோ காரில் இடம்பெற்றுள்ள பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் மைலேஜ், விலை மற்றும் காரை வாங்குவதற்கான காரணங்கள் போன்றவற்றுடன் அனைத்தையும் அறிந்து கொள்ளலாம்.

Google News

ஸ்டைல் டிசைன் வடிவமைப்பு 

இந்திய சந்தையை பொருத்தவரைக்கும் தனது வழக்கமான குறைந்த விலைக்கான மூலக்கூறை பின்பற்றியே மாருதி இந்த காரை வடிவமைத்துள்ளது. முன்பாக, விற்பனை செய்யப்பட்ட பழைய வேகன்ஆர், இக்னிஸ் ஆல்ட்டோ கே10 மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா போன்றவற்றின் தோற்ற உந்துதல்கள் பல்வேறு இடங்களில் பெற்று பாக்ஸ் வடிவ டிசைனுடன் பெரும்பாலானோரை இந்த வடிவமைப்பு அவ்வளவாக கவரவில்லை என்றே குறிப்பிடலாம். மஹிந்திராவின் ஸ்டைலை பின்பற்றியே வடிவமைக்கப்பட்டதாக நீங்கள் நினைத்தாலும் தவறில்லை. இருந்த போதும் விட்டாரா பிரெஸ்ஸா காரின் உந்துதலை பெற்ற முன்புற கிரில் மற்றும் பம்பர் அமைப்பு போன்றவை பிரெஸ்ஸாவின் தம்பியாக நினைவுப்படுத்துகின்றது.

பொதுவாக இந்நிறுவனம் விலை குறைப்பிற்கு என பல்வேறு அம்சங்களை துனைக்கருவிகளாக மட்டுமே இணைத்துள்ளது. எஸ்-பிரெஸ்ஸோவின் எல்இடி ரன்னிங் விளக்கு முதல் அலாய் வீல் வரை பல்வேறு ஸ்டைலிங் மேம்பாடுகள் அனைத்தும் ஆக்செரீஸ்தான்.

ஆக்செரிஸ் பொருத்தப்படவில்லை என்றால் இது சாதாரன காராகத்தான் காட்சி அளிக்கும், எல்இடி ரன்னிங் விளக்கு, ஸ்கிட் பிளேட், வீல் ஆர்சு, அலாய் வீல் உட்பட பெரும்பாலானைவை இணைக்கப்பட்டால் காரின் ஸ்டைலிங் திறன் மேம்பட வாய்ப்புகள் உள்ளது. கார் வாங்கிய பிறகு கூடுதலாக ஸ்டைலிங் சார்ந்த மேம்ம்பாடுகளுக்கு ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை செலவு செய்ய வேண்டியிருக்கும். அப்படியேனும் எஸ்யூவி ஆக காட்சியளிக்கலாம்.

maruti-suzuki-s-presso

maruti-suzuki-s-presso

எஸ்-பிரெஸ்ஸோவின் இன்டிரியர்

சிறப்பான இன்டிரியர் அமைப்பு டேஸ்போர்டின் மத்தியில் வழங்கப்பட்டுள்ள வட்ட வடிவ கன்சோலில் கிளஸ்ட்டர், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெறுள்ளது. 5 இருக்கைகளை கொண்டுள்ள இந்த காரில் 2380 மிமீ வீல்பேஸ் பெற்று போட்டியாளரான ரெனோ க்விட் காரை விட குறைவாகும். எக்ஸ்டீரியரை போல அல்லாமல் இன்டிரியர் அமைப்பு சற்று பிரீமியமாக காட்சி அளிக்கின்றது.

டேஸ்போர்டில் இரு புறமும் வட்ட வடிவ ஏசி வென்ட், சென்டரல் கன்சோலின் மேற்பகுதியில் ஏசி வென்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி இன்டிரியரில் இருக்கை அமைப்பு மற்றும் பூட் ஸ்பைஸ் 240 லிட்டர் கொள்ளளவுடன் அமைந்துள்ளது. 6 அடி உயரம் உள்ளவர்களும் காரில் அமருவத்கு ஏற்ற வகையில் மிக சிறப்பான வகையில் காரின் ஹெட்ரூம் சற்று உயரம் அதிகமானவர்களும் அமரும் வகையிலும், லெக்ரூம் சிறப்பாக உள்ளது.

பின் இருக்கைகள் தாரளமான இடவசதி பெற்றிருப்பதுடன் தரமான சஸ்பென்ஷன் அமைப்பினை வழங்கியுள்ளதால் காரின் சொகுசு தன்மை ஒரளவு குறிப்பிடும் வகையில் அமைந்திருக்கின்றது.

maruti suzuki s presso dashboard

டிஜிட்டல் கிளஸ்ட்டரை கொண்டுள்ளது. அதன் கீழே 7.0 அங்குல மாருதியின் ஸ்மார்ட் பிளே ஸ்டுடியோ தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு, ஸ்பீடோமீட்டர் கன்சோல் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட ஒரு பெரிய வட்ட வடிவத்தைக் கொண்டுள்ளன, இந்த மினி எஸ்யூவிக்கு கூடுதல் அழகாக விளங்குகின்றது. வட்ட வட்டத்தின் இருபுறமும் மத்தியில் ஏசி வென்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

வேகன் ஆர் மற்றும் பிற மாருதி மாடல்களில் காணப்படும் அதே ஸ்டீயரிங் உடன் மாருதியின் எஸ்-பிரெஸ்ஸோ வந்துள்ளது. ஸ்டீயரிங்கில் பொருத்தப்பட்ட ஆடியோ மற்றும் போன் கட்டுப்பாடுகள், கைமுறையாக சரிசெய்யக்கூடிய விங் மிரர், முன்புற பவர் விண்டோஸ், 12 வோல்ட் சாக்கெட், யூ.எஸ்.பி மற்றும் ஆக்ஸ் உள்ளீடுகளை கொண்டுள்ளது.

என்ஜின் செயல்பாடு

எஸ்-பிரஸ்ஸோ காரில், மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் K10B 1.0 லிட்டர் பொருத்தப்பட்டு பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையாக விளங்கும். 50 கிலோ வாட் (67.98 பிஎஸ்) அதிகபட்ச சக்தியை 5,500 ஆர்பிஎம் மற்றும் 90 என்எம் டார்க்கை 3,500 ஆர்பிஎம்-ல் வழங்கும். இந்த மாடலில் 5-ஸ்பீட் மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் வழங்கப்படும்.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் மைலேஜ் லிட்டருக்கு 21.7 கிமீ ஆகும்.

சராசரியாக சிட்டி மற்றும் ஹைவே பயன்பாட்டின் போது மைலேஜ் லிட்டருக்கு 17 கிமீ முதல் 19 கிமீ வரை கிடைக்கும்.

maruti spresso suv interior

பாதுகாப்பு வசதிகள்

பொதுவாக அனைத்து வேரியண்டிலும் இந்திய சந்தையில் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டாய பாதுகாப்பு வசதிகளான ஓட்டுநர் ஏர்பேக், ஏபிஎஸ்,  ரியர் பார்க்கிங் சென்சார், சீட் பெல்ட் ரிமைண்டர், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம் ஆகியவற்றை கொண்டிருக்கின்றது. கூடுதலாக உடன் பயணிப்பவருக்கான ஏர்பேக் என்பது ஆப்ஷனல் வேரியண்டில் மட்டும் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு சார்ந்த கூடுதல் வசதிகள் பேஸ் வேரியண்டில் ஆப்ஷனலாக மட்டுமே வழங்கப்படுகின்றது.

போட்டியாளர்கள்

ரெனோ க்விட் மற்றும் டட்சன் ரெடி-கோ போன்ற கார்களை எதிர்கொள்ளுகின்றது.

மாடல் விலை (ex-showroom, Delhi)
1.0 லிட்டர் என்ஜின்
ரெனோ க்விட் ₹ 4.33 முதல் ₹ 4.84 லட்சம்
டட்சன் ரெடி-கோ ₹ 3.90 முதல் ₹ 4.37 லட்சம்
மாருதி எஸ் பிரெஸ்ஸோ ₹ 3.69 முதல் ₹ 4.91 லட்சம்

 

எஸ் பிரெஸ்ஸோ காரின் பிளஸ் என்ன ?

 • மாருதியின் ஆல்ட்டோ, பழைய வேகன் ஆர் கார்களின் வாடிக்கையாளர்கள் தங்களது காரினை அப்டேட் செய்ய நினைத்தால் எஸ் பிரெஸ்ஸோ சிறந்த தேர்வாக இருக்கலாம்.
 • இன்டிரியர் அமைப்பு வசதிகள்
 • மிகப்பெரிய எஸ்யூவி அல்லது நடுத்தர எஸ்யூவி கார்களுக்கு மாற்றாக குறைந்த விலை எஸ்யூவி என மாருதி நிறுவனத்தால் அழைக்கப்படுகின்ற இந்த கார் ஏற்றதாகும்.
 • சிறந்த மைலேஜ்

எஸ் பிரெஸ்ஸோ காரின் மைனஸ் என்ன ?

 • விலை குறைப்பிற்காக ஃபாக் லேம்பை தவிர்த்திருப்பது
 • பெரும்பாலான ஸ்டைலிங் வசதிகள் அனைத்தும் ஆக்செரிஸ்தான் இதனால் அதிகம் செலவு செய்ய வேண்டிய நிலை
 • காரில் ஆப்ஷனல் வேரியண்டில் மட்டும் இரண்டு ஏர்பேக்
 • மாருதியின் ரசிகர்களை மட்டுமே திருப்திபடுத்துகின்றது.

maruti-s-presso-vs-renault-kwid

மாருதி தனது வழக்கமான இந்தியர்களுக்கு எஸ்யூவி கார் என்ற நம்பவைக்கின்றது. 2019 ரெனோ க்விட் மற்றும் டட்சன் ரெடி-கோ போட்டியாளர்களை முயற்சித்து பார்த்து இந்த காரை தேர்ந்தெடுங்கள்.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ விவரக்குறிப்புகள்
 •  என்ஜின்: 998cc, 3-சிலிண்டர், பெட்ரோல்
 • பவர்: 68 PS at 5500 RPM
 • டார்க்: 90 Nm at 3500 RPM
 • கியர்பாக்ஸ்: 5-Speed MT, 5-Speed AMT
 • மைலேஜ்: 15-17 km/l
 • எரிபொருள் வகை: பெட்ரோல்
 • டயர் அளவு: 165/70/14 (முன் & பின்)
 • சஸ்பென்ஷன்: McPherson Strut (Front), Torsion Beam (Rear)
 • பிரேக்: டிஸ்க் (முன்), டிரம் (பின்)
 • பாதுகாப்பு: 2 ஏர்பேக், ஏபிஎஸ் உடன் இபிடி
மாருதி எஸ் பிரெஸ்ஸோ அளவுகள்
 • நீளம்: 3565 mm
 • அகலம்: 1520 mm
 • உயரம்: 1549 mm
 • வீல்பேஸ்: 2380 mm
 • கிரவுண்ட் கிளியரன்ஸ்: 180 mm
 • எரிபொருள் டேங்க்: 27 litres
 • பூட் ஸ்பேஸ்: 270 litres
 • எடை : 726 – 767 கிலோ