நாட்டின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் ஜூலை 2023 முடிவில் 152,126 யூனிட்களை எட்டியுள்ளது, ஜூலை 2022-ல் விற்பனை செய்யப்பட்ட 142,850 யூனிட்டுகளை விட ஆண்டுக்கு ஆண்டு (YoY) 6.5 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.
குறிப்பாக, மாருதியின் எஸ்யூவி மாடல்களான பிரெஸ்ஸா, ஃப்ரான்க்ஸ், ஜிம்னி மற்றும் கிராண்ட் விட்டாரா மாடல்கள் அமோகமான வரவேற்பினை பெற்றுள்ளது.
MSIL Sales Report – July 2023
பிரெஸ்ஸா, ஃப்ரான்க்ஸ், ஜிம்னி மற்றும் கிராண்ட் விட்டாரா எஸ்யூவி உட்பட எம்பிவி ரக எர்டிகா, இன்விக்டோ எக்ஸ்எல்6 மற்றும் எஸ் கிராஸ் போன்றவை முந்தைய ஆண்டின் இதே ஜூலை மாதம் ஒப்பீடுகையில் 167 % வளர்ச்சி அடைந்துள்ளது.
மேலும், இந்நிறுவன துவக்க நிலை ஆல்டோ, எஸ் பிரெஸ்ஸோ விற்பனை 53 % சரிவடைந்துள்ளது. இலகுரக வர்த்தக வாகனங்கள் (LCV) விற்பனையும் 2,559 அலகுகளாக குறைந்துள்ளது. மற்ற விபரங்கள் அட்டவனையில் இடம்பெற்றுள்ளது.