தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் இருந்து பன்னாட்டு கார் உற்பத்தியாளர் ஏற்றுமதி செய்கின்ற முதல் எலக்ட்ரிக் கார் என்ற பெருமையுடன் 500 சிட்ரோன் eC3 கார்களை சென்னை காமராஜர் துறைமுகத்திலிருந்து இந்தோனேசியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
இந்திய அரசாங்கத்தின் “மேக் இன் இந்தியா” திட்டத்தின் ஒரு பகுதியாகவும், Stellantis குழுமத்தின்’ Dare Forward Mission 2030 முயற்சியின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதுகிப்புகளை குறைக்கின்ற எலக்ட்ரிக் கார் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
Stellantis இந்தியாவின் CEO & MD, ஆதித்யா ஜெய்ராஜ், கூறுகையில், “இந்தியா ஒரு மிக சிறப்பான சந்தை மட்டுமல்ல, ஸ்டெல்லண்டிஸ் குழுமத்திற்கு வாகனங்கள், பாகங்கள் மற்றும் மொபிலிட்டி தொழில்நுட்பங்களுக்கான முக்கிய ஆதார மையமாகவும் உள்ளது.
சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு ‘மேட்-இன்-இந்திய சிட்ரோன் eC3’ மின்சார வாகனத்தின் ஏற்றுமதியைத் தொடங்குவது, எங்கள் பொறியியல் மற்றும் மேம்பாட்டுத் திறன்களின் பெருமைக்குரிய அங்கீகாரமாகும்.
உலகளாவிய அரங்கில் இந்தியாவின் உற்பத்தித் திறனை வெளிப்படுத்தும் அதே வேளையில், இந்தியாவில் வளர்ச்சியடைவதற்கும், நிலையான இயக்கத்தை மேம்படுத்துவதற்கும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.” என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
e-C3 எலக்ட்ரிக் கார் மட்டுமல்லாமல் C3 ஹேட்ச்பேக் மாடலை ASEAN மற்றும் ஆப்பிரிக்க சந்தைகளுக்கு ஏற்றுமதியை சிட்ரோன் தொடங்கியுள்ளது.