Automobile Tamilan

மாருதி சுசுகி எர்டிகா, எக்ஸ்எல் 6, சியாஸ் பெட்ரோல் மைல்டு ஹைபிரிட் கார்கள் திரும்ப அழைப்பு

xl6

இந்தியளவில் ஜனவரி 1, 2019 முதல் நவம்பர் 21,2019 வரை தயாரிக்கப்பட்ட 63,493 மாருதி சுசுகி எர்டிகா, எக்ஸ்எல் 6, மற்றும் சியாஸ் பெட்ரோல் மாடலின் மைல்டு ஹைபிரிட் (SHVS) கார்களில் உள்ள மோட்டார் ஜெனரேட்டர் யூனிட்டில் உள்ள கோளாறினை நீக்குவதற்காக திரும்ப அழைக்கப்பட்டுள்ளது.

63,493 வாகனங்களையும் மாருதி சுசுகி ஆய்வு செய்யும், மேலும் தவறான பகுதியை மாற்ற வேண்டிய வாகனங்கள் பகுதியை மாற்றுவதற்கு எவ்விதமான கட்டணமுமின்றி  இலவசமாக மாற்றித் தரப்பட உள்ளது. இன்று முதல், இந்த பாகத்தை ஆய்வு செய்யும் நோக்கில் சந்தேகிக்கப்படும் வாகனங்களின் உரிமையாளர்களை மாருதி சுசுகி டீலர்கள் தொடர்பு கொள்ள தொடங்கியுள்ளனர்.

மூன்று கார்களிலும் ஒரே 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மாருதி எஸ்விஹெச்எஸ் நுட்பத்தை பெற்றதாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. உங்கள் வாகனமும் பாதிக்கப்பட்டுள்ளதா என அறிய மாருதி சுசுகி இணையதளத்தில் உங்களின் காரின் சேஸ் எண்ணை கொண்டு அறிந்து கொள்ளலாம்.

மேலும் படிங்க – மாருதி எக்ஸ்எல் 6 சிறப்புகள்

Exit mobile version