Automobile Tamilan

6 மாதங்களில் 2 லட்சம் பிஎஸ் 6 மாருதி சுசுகி கார்களை விற்பனை செய்துள்ளது

s-presso suv

இந்தியாவின் முதன்மையான கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி நிறுவனம், பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான கார்களை விற்பனைக்கு வெளியிட்ட 6 மாதங்களில் இரண்டு லட்சம் எண்ணிக்கை விற்பனை இலக்கை கடந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதன்முறையாக மாருதி பலேனோ காரில் பாரத் ஸ்டேஜ் 6 மாடல் வெளியானது.

மேலும் இந்நிறுவனம் வருகின்ற ஏப்ரல் 2020 க்கு பிறகு டீசல் என்ஜின் தயாரிப்பை நிறுத்த திட்டமிட்டுள்ளது. தற்பொழுது பெரும்பாலான மாருதியின் வாகனங்களில் ஃபியட்டின் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாடல் பிஎஸ் 6 முறைக்கு மாற்றப்பட வாய்ப்பில்லை என குறிப்பிட்டுள்ளது.

விற்பனை குறித்து கருத்து தெரிவித்த மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கெனச்சி அயுகாவா, “எங்கள் பிஎஸ் 6  வாகனங்களைத் தேர்ந்தெடுத்த வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். தற்பொழுது 8 மாடல்களில் பிஎஸ் 6 பெட்ரோல் என்ஜின்கள் கிடைத்து வருகின்றது.

தற்போதைய நிலவரப்படி, மாருதி சுசுகியின் பிஎஸ் 6 வரிசையில் நான்கு பெட்ரோல் என்ஜின்கள் உள்ளன. 800 சிசி மூன்று சிலிண்டர் யூனிட், 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் என்ஜின், 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் என்ஜின், மற்றும் புதியது 1.5 லிட்டர் கே15 நான்கு -சிலிண்டர் பெட்ரோல் ஆகும். 800சிசி என்ஜின் ஆனது ஆல்டோ 800 மற்றும் எஸ்-பிரஸ்ஸோ 1.0 லிட்டர் என்ஜினுடன் கிடைக்கின்றது. 1.2 லிட்டர் என்ஜின் பலேனோ, ஸ்விஃப்ட், டிசையர் மற்றும் புதிய வேகன் ஆர் போன்ற கார்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 1.5 லிட்டர் என்ஜின் மாருதி எர்டிகா மற்றும் XL6 கார்களில் கிடைக்கின்றது.

இந்த பிஎஸ் 6 இணக்கமான பெட்ரோல் என்ஜின்கள்  நைட்ரஜன் ஆக்சைடு (NOx) மாசு உமிழ்வில் கிட்டத்தட்ட 25 சதவீதத்தை குறைக்க வழிவகுக்கிறது என்று மாருதி சுசுகி குறிப்பிடப்பட்டுள்ளது. கார்கள் விரிவாக சோதனை செய்யப்பட்டுள்ளதால் எந்த பிரச்சனையும் இல்லாமல் பிஎஸ் 4 பெட்ரோலில் இயக்க முடியும் என்றும் மாருதி குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version