Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 427

Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 428
டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது | Automobile Tamilan

டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது

72288 tvs jupiter 125

ரூ.73,400 விலையில் வெளியிடப்பட்டுள்ள டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் புதிய ஜூபிடர் 125 ஸ்கூட்டரில் சிறப்பான மைலேஜ் வழங்குவதுடன் பல்வேறு வசதிகளை பெற்றதாக விற்பனைக்கு வந்துள்ளது.

சமீபத்தில் டிவிஎஸ் Raider 125 பைக் மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்டிருந்த நிலையில் அடுத்ததாக 125சிசி ஸ்கூட்டர் சந்தையில் புதிய ஜூபிடர் வந்துள்ளது. முன்பாக இந்நிறுவனம் 125சிசி சந்தையில் ஸ்போர்ட்டிவான என்டார்க் 125 மாடலை விற்பனை செய்து வருகின்றது.

டிவிஎஸ் ஜூபிடர் 125

டிவிஎஸ் நிறுவனம் ஸ்டைலிஷான தோற்ற அமைப்பினை வழங்கியுள்ள ஜூபிடர் 125 மாடலில்  8.3hp பவரை 6,000rpm மற்றும் 10.5Nm டார்க்கினை 4,500rpm வழங்கும் 124.8cc என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

முதன்முறையாக 125சிசி சந்தையில் கேஸ் நிரப்பப்பட்ட ஒற்றை ஷாக் அப்சார்பரை பின்புறத்தில் பெற்ற ஜூபிட்டரில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் வழங்கப்பட்டு, இருக்கைக்கு அடியில் வழங்கப்பட்டுள்ள ஸ்டோரேஜ் வசதியை பொருத்தவரை இரண்டு ஹெல்மெட்களை வைக்கும் வகையில் 32 லிட்டர் கொள்ளளவு இடவசதி கொடுக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version