க்ரீன்செல் மொபைலிட்டி கீழ் செயல்படும் நியூகோ (Nuego) எலக்ட்ரிக் பஸ் சர்வீஸ் நிறுவனம், சென்னை-பாண்டிச்சேரி, சென்னை-பெங்களூரு மற்றும் சென்னை-திருப்பதி என சென்னையிலிருந்து மூன்று இடங்களுக்கு நகரங்களுக்கு இடையிலான பேட்டரி மின்சார பேருந்து சேவையை தொடங்கியுள்ளது.
இந்த பேருந்துகள் சிசிடிவி கண்காணிப்பு, ஓட்டுநர் குடிபோதை சோதனை, ஓட்டுநர் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் வேக வரம்பு சோதனை ஆகியவற்றை கொண்டுள்ளன. பேருந்து இயந்திர மற்றும் மின் சோதனை உட்பட 25க்கு மேற்பட்ட கடுமையான பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுகின்றன.
2022 முதல் வட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சேவை வழங்கி வரும் நிலையில் தென்னிந்தியாவில் முதன்முறையாக துவங்கப்பட்டுள்ளது. சென்னையில், கோயம்பேட்டில் இருந்தும், புதுச்சேரியில், புறப்படும் இடம் பிஆர்டிசி பேருந்து நிலையம் ஆகும். திருப்பதியில், ஆர்டிசி பேருந்து நிலையத்திலிருந்து பயணிகள் பேருந்துகளில் ஏறலாம், பெங்களூரில் பேருந்துகள் மெஜஸ்டிக்கில் இருந்து புறப்படும்.
அனைத்து விதமான போக்குவரத்து நெரிசல்களிலும் ஏர் கண்டிஷனருடன் இயக்கும் போதும், எலக்ட்ரிக் பஸ் ஒருமுறை சார்ஜ் செய்தால் 250 கிலோ மீட்டர் பயணிக்க முடியும் என நியூகோ குறிப்பிட்டுள்ளது.
Redbus, Paytm மற்றும் Abhibus போன்ற பிற டிஜிட்டல் தளங்களுடன் NeuGo இணையதளம் மற்றும் ஆப் மூலம் வாடிக்கையாளர்கள் பேருந்து சேவையை பெற டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.