Automobile Tamilan

டாடா நானோ, சுமோ , இன்டிகோ கார்கள் நீக்கம் எப்பொழுது ?

இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா சுமோ , டாட நானோ ,இன்டிகோ போன்ற கார்கள் அடுத்த 3 முதல் 4 வருடங்களுக்குள் சந்தையிலிருந்து நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

டாடா சுமோ

பல ஆண்டுகளாக சந்தையில் உள்ள டாடா சுமோ எஸ்யுவி மற்றும் குறைந்த விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்ட டாடா நானோ தவிர இன்டிகோ, இன்டிகா போன்ற மாடல்களும் சந்தையிலிருந்து நீக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது.

மாசு விதிகளுக்கு ஏற்ப கார்களை தயாரிப்பது ,மாறி வரும் சந்தையின் நிலை அதிகரித்து வரும் காம்பேக்ட் ரக கார்களின் ஆதிக்கம் போன்றவற்றுக்கு ஈடுகொடுக்கும் வகையிலான மாடல்களை டாடா களமிறக்க உள்ளதால் பழைமையான மாடல்களை படிப்படியாக நீக்க முடிவெடுத்துள்ளது. இந்த பட்டியலில் நானோ காரும் இடம்பெற உள்ளது.

பிரசத்தி பெற்ற டாக்சி மாடல்களான இன்டிகோ ,இன்டிகோ இசிஎஸ் போன்றவை நீக்கப்பட்டு இவைகளுக்கு மாற்றாக போல்ட் மற்றும் ஸெஸ்ட் போன்ற கார்களை நிலை நிறுத்த டாடா முயற்சிக்க உள்ளது. தற்பொழுது போல்ட் மற்றும் ஸெஸ்ட் போன்ற கார்களுக்கு டாக்சி சந்தைக்கு சிறப்பான சலுகைகள் வழங்கப்பட உள்ளது.

டாடாவின் புதிய இம்பேக்ட் டிசைன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட டியாகோ மற்றும் டீகோர் செடான் போன்றவற்றை தொடர்ந்து அடுத்த சில மாதங்களில் டாடா நெக்ஸான் எஸ்யூவி மாடல் ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வரவுள்ளது.

Exit mobile version