Automobile Tamilan

2025 ஆகஸ்ட் மாத விற்பனையில் டாப் 10 எலக்ட்ரிக் டூ வீலர் தயாரிப்பாளர்கள்

vida vx2 electric scooter

நடப்பு ஆகஸ்ட் 2025 மாதந்திர மின்சார இரு சக்கர வாகன விற்பனையில் 21,344 யூனிட்டுகளுடன் டிவிஎஸ் மோட்டார் முதலிடத்திலும், ஹீரோ மோட்டோகார்ப் விடா மூன்றாவது இடத்தை கைப்பற்றியுள்ள நிலையில், இந்நிறுவனத்தின் மாதந்திர விற்பனையில் முதன்முறையாக 12,000 யூனிட்டுகளை கடந்துள்ளது.

குறிப்பாக பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சேட்டக் ஸ்கூடரின் விற்பனை சீனாவின் அரிய வகை காந்தம் பெறுவதில் ஏற்பட்ட சிக்கலால் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் 5வது இடத்துக்கு தள்ளப்பட்டிருந்தாலும் 10,963 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. முன்பாக முன்னணியில் இருந்த ஓலா எலக்ட்ரிக் இந்த முறை 16,708 யூனிட்டுகளை விற்றுள்ளது. பிரபலமான ஏதெர் எனர்ஜி ஆகஸ்டில் 12,370 யூனிட்டுகளை பதிவு செய்துள்ளது.

அதிகாரப்பூர்வ Vahan தரவுகளின் படி நாட்டின் 1446 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் 1386 வட்டாரங்களின் வாகன தரவுகளின் அடிப்படையில் கீழே டாப் 10 எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்கள் பட்டியிலடப்பட்டுள்ளது. தகவல் பெறப்பட்ட நேரம் 31-08-2025 10:30Am ஆகும்.

ஆகஸ்ட் 2025ல் ஒட்டுமொத்தமாக இந்தியாவின் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனை எண்ணிக்கை 85,623 ஆகும்.

உற்பத்தியாளர் மொத்தம்
டிவிஎஸ் மோட்டார் 21,344
ஓலா எலக்ட்ரிக் 16,708
ஹீரோ விடா 12593
ஏதெர் எனர்ஜி 12,370
பஜாஜ் சேட்டக் 10,963
கிரிவ்ஸ் எலக்ட்ரிக் 3,814
ரிவர் மொபைலிட்டி 1,611
பிகாஸ் 1,554
கைனடிக் 1,173
ரிவோல்ட் 861

ஆதாரம் – Vahan

குறிப்பாக இந்தியாவின் முன்னணி ICE ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஹோண்டா நிறுவனம் 354 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது.

Exit mobile version