கொரோனா வைரஸ்.., 200 சீன நிறுவனங்களால் பீதியில் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி

Auto  Expo

இந்தியாவின் மிகப்பெரிய மோட்டார் ஷோ கண்காட்சி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் இந்தாண்டு பெரும்பாலான சீன வாகன தயாரிப்பாளர்கள் தங்கள் மாடல்களை இந்திய சந்தையில் வெளியிட திட்டமிட்டுள்ளதால் இந்த கண்காட்சியில் மிக தீவரமான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக சியாம் அறிவித்துள்ளது.

சீனாவிலிருந்து பரவி வருகின்ற கொரோனா கிருமி பாதிப்பால் 200 -க்கு அதிகமானோர் இறந்துள்ள நிலையில், பல்வேறு நாடுகளில் இந்த வைரஸ் பரவி வருகின்றது. குறிப்பாக இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையில் சீனாவின் பங்களிப்பு அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில் பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ள கண்காட்சியில் இந்தாண்டு பெரும்பாலான சீன நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

சீனாவை தலைமையிடமாக கொண்ட எஸ்ஏஐசி குழுமத்தின் எம்ஜி மோட்டார் முதன்முறையாக கார் சந்தையில் வெற்றியை எட்டியுள்ள நிலையில், அடுத்ததாக FAW ஹைய்மா, சாங்கன் ஆட்டோமொபைல்ஸ், கிரேட் வால் மோட்டார்ஸ் போன்றவற்றுடன் பல்வேறு எலெக்ட்ரிக் டூ வீலர் தயாரிப்பாளர்களும் பங்கேற்க உள்ளனர். குறிப்பாக ACMA அரங்கில் பல்வேறு உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். மொத்தமாக 200க்கு அதிகமான சீன தயாரிப்பாளர்கள் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் பெரும்பாலான சீன மோட்டார் நிறுவனங்களின் அதிகாரிகள் இந்தியா வருவதனை இரத்து செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.எனவே, இந்நிறுவனங்களின் இந்திய பிரதிநிதிகள் மட்டுமே பங்கேற்க உள்ளனர். இருந்த போதும் கொரோனா பீதியை கிளப்பி வருகின்றது

Exit mobile version