Bus

mahindra ekuv100 price: 147 கிமீ ரேஞ்சு.., ரூ.8.25 லட்சத்தில் வந்த மஹிந்திரா eKUV100 EV விற்பனைக்கு வந்தது

இந்தியாவின் மிக குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் மாடலாக மஹிந்திரா eKUV100 காரின் விலை ரூ.8.25 லட்சம் என நிர்ணையிக்கப்பட்டுள்ளது. சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 147 கிமீ தூரத்தை பயணிக்க இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

40 கிலோவாட் லித்தியம் ஐயன் பேட்டரி மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் கொண்டு 53 ஹெச்பி பவர் மற்றும் 120 என்எம் டார்க் வெளிப்படுத்தலாம். சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 147 கிமீ தொலைவு வரை செல்லும் திறன் கொண்டதாக விளங்குகின்றது. 80 சதவீத சாரஜ் ஏறுவதற்கு சுமார் 60 நிமிடங்களை மட்டும் எடுத்துக் கொள்ள வழிவகுக்கும் விரைவு சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.