கார்னிவல் சவால்., எம்ஜி ஜி10 எம்பிவி வெளியானது – ஆட்டோ எக்ஸ்போ 2020

mg g10

எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் வெளியிட்டுள்ள மற்றொரு மாடலான ஜி10 எம்பவி ரக மாடல் கார்னிவல் இன்னோவா உள்ளிட்ட கார்களை எதிர்கொள்ளும் திறனை கொண்டதாகும். சர்வதேச அளவில்  LDV G10 மற்றும் மேக்சஸ் G10 என விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட 9 இருக்கை கொண்ட ஜி10 மாடல் சர்வதேச அளவில் 7 இருக்கை 8 இருக்கை வெர்ஷனில் கிடைக்கின்றது. ஜி10 எம்பிவி பொதுவாக 2.4 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 140 ஹெச்பி பவர் மற்றும் 210 என்எம் டார்க்கை வழங்குகிறது. இதுதவிர, இந்த மாடல் 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.9 லிட்டர் டீசல் எஞ்சினுடன் சில நாடுகளில் கிடைக்கிறது. இதன் பவர் 150 ஹெச்பி மற்றும் 350 என்எம் டார்க்  வழங்குகின்றது. 6 வேக தானியங்கி மற்றும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் என இருவிதமான முறையில் கிடைக்கிறது.

காரின் நீளம் 5168 மிமீ, 1,980 மிமீ அகலம் மற்றும் 1,928 மிமீ உயரம் கொண்டுள்ள இந்த மாடல் மிக நேர்த்தியான எம்ஜி கிரிலை கொண்டு பக்கவாட்டில் ஸ்லைடிங் வகையிலான கதவினை கொண்டுள்ளது. மிகவும் தாராளமான இடவசதி அதிகப்படியான சொகுசு தன்மை மற்றும் பல்வேறு கனெக்ட்டிவிட்டி அம்சங்களை கொண்டுள்ளது.

எம்ஜி ஜி10 மாடலுக்கு நேரடி போட்டியாக கியா கார்னிவல் எம்பிவி விளங்கும். இந்தியாவில் அடுத்த ஆண்டு விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.

Exit mobile version