Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 427

Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 428
ஸ்கோடா விஷன் இன் எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம் - ஆட்டோ எக்ஸ்போ 2020

ஸ்கோடா விஷன் இன் எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2020

skoda vision in concept

வரும் 2021 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ஸ்கோடா விஷன் இன் கான்செப்ட் காரை ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் காட்சிப்படுத்த உள்ளது. இந்திய சந்தையில் ரூ.7600 கோடி அளவில் மிகப்பெரிய முதலீட்டை மேற்கொள்ள ஃபோக்ஸ்வேகன் குழுமம் திட்டமிட்டுள்ளது.

ஸ்கோடா நிறுவனம் முன்பே பலமுறை விஷன் இன் கான்செப்ட் குறித்தான டீசரை வெளியிட்டு வந்த நிலையில் தற்போது இதனை ஃபோக்ஸ்வேகன் மீடியா நைட் நிகழ்ச்சியில் வெளியிட்டுள்ளது. ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் இந்த எஸ்யூவி பொதுமக்கள் பார்வைக்கு வரவுள்ளது.

சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்ற காமிக் எஸ்யூவி காரின் உந்துதலை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடல்  4.26 மீட்டர் நீளம் பெற்ற எஸ்யூவி காராக வெளியாக உள்ள விஷன் இன் கான்செப்டின் உற்பத்தி நிலை மாடல் வோக்ஸ்வேகனின் MQB A0 IN பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டு பெரும்பாலான உதிரி பாகங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட உள்ளது. மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் முன்புற கிரில் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி ரன்னிங் விளக்குகள் காருக்கு கூடுதல் கவர்ச்சியை ஏற்படுத்துகின்றது.

ஃபீரி ஸ்டேண்டிங் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் சென்டரல் கன்சோலில் உள்ளது. மேலும் டேஸ்போர்டின் நீளத்திற்கு க்ரோம் நிறத்திலான அம்சத்தை பெற்று பெருவாரியாக சென்டரல் கன்சோல், டேஸ்போர்ட், ஆர்ம்ரெஸ்ட் மற்றும் கதவு பேனல்களில் ஆரஞ்சு நிறம் சேர்க்கப்பட்டுள்ளது. இன்டிரியர் அமைப்பில் பல்வேறு கனெக்ட்டிவிட்டி அம்சங்களை பெறுகின்ற இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம் பெற உள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ஸ்கோடா விஷன் இன் கான்செப்டில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் ஆகியவை இடம்பெறலாம். டீசல் என்ஜின் இடம்பெற வாய்ப்பில்லை. மாற்றாக சிஎன்ஜி என்ஜின் ஆப்ஷனை பெறக்கூடும் என எதிர்பார்கப்படுகின்றது. 2020 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிக்கு வந்துள்ளள்ள விஷன் இன் விற்பனைக்கு 2021 ஆம் ஆண்டின் முதல் காலண்டில் எதிர்பார்க்கலாம்.

இந்தியா சந்தையில் கிடைக்கின்ற ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், வோக்ஸ்வேகன் டைகன், எக்ஸ்யூவி 500 போன்ற கார்களை எதிர்கொள்ள உள்ளது.

Exit mobile version