சாங்யாங் டிவோலி XLV டீஸர் – ஜெனிவா மோட்டார் ஷோ

அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மோட்டார் ஷோவில் சாங்யாங் டிவோலி XLV காரின் டீஸர் படத்தை வெளியிட்டுள்ளது. கடந்த ஃபிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் காட்சிககு வந்த டிவோலி XLV ஏர் கான்செப்ட் மாடலை அடிப்படையாக கொண்டதாகும்.

டிவோலி ஸ்டாண்டர்டு காரின் தோற்றத்தினை பெற்றிருக்கும் , எக்ஸ்எல்வி மாடலில் தோற்றம் மற்றும் உட்புற வசதிகள் போன்றவற்றில் பெரிதான மாற்றங்கள் இருக்காது. வீல்பேஸ் அளவில் எந்த மாற்றங்களும் செய்யாமல் கூடுதலாக 235மிமீ நீளத்தினை அதிகரித்து கூடுதலாக இரு இருக்கைகளை சேர்த்து மொத்தம் 7 இருக்கைகள் கொண்ட மாடலாக டிவோலி XLV கான்செப்ட் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் உட்புற இடவசதி மற்றும் பூட் ஸ்பேஸ் 720 லிட்டர் வரை அதிரிக்கப்பட்டிருக்கும்.

தற்பொழுது டிவோலி காரில் உள்ள 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷனிலே தொடரும் ஆற்றலும் பெரிதாக வித்தியாசப்பட வாய்ப்புகள் குறைவு.  இதில் 6 வேக மெனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றிருக்கும். 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் ஆப்ஷனும் இருக்கலாம்.

டிவோலி காம்பேக்ட் க்ராஸ்ஓவர் கார் இந்திய சந்தையில் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் டிவோலி  XLV மாடலும் இந்தியாவிற்கு வரவாய்ப்புகள் உள்ளது.

Share