Automobile Tamilan

டட்சன் கோ க்ராஸ் கார் காட்சிக்கு வந்தது – ஆட்டோ எக்ஸ்போ 2016

நிசான் நிறுவனத்தின் பட்ஜெட் பிராண்டு டட்சன் கோ க்ராஸ் கான்செப்ட் கார் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016யில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. நேர்த்தியான ஸ்டைலிங் அம்சங்களுடன் சிறப்பான க்ராஸ்ஓவர் மாடலாக கோ க்ராஸ் விளங்கும்.

datsun-go-cross-concept

கோ மற்றும் கோ + மாடல்கள் மிக குறைவான விலையில் விற்பனைக்கு வந்தாலும் பாதுகாப்பு தர சோதனையில் தோல்வி மற்றும் போதுமான அளவு வாடிக்கையாளர் மத்தியில் வரவேற்பினை பெற தவறியதால் மிக குறைவான எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது.

தன்னுடைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட நிசான் டட்சன் தற்பொழுது கோ காரினை அடிப்படையாக கொண்ட மிகவும் ஸ்டைலிஸ் மற்றும் எஸ்யூவி கார்களுக்கு இணையான தோற்றம் வழங்கும் க்ராஸ்ஓவர் மாடலை உருவாக்கும் கான்செப்ட் மாடலை டொயோட்டா ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முறையாக காட்சிப்படுத்தியது. அதே கோ க்ராஸ் மாடலை தற்பொழுது டெல்லியிலும் காட்சிக்கு வைத்துள்ளது.

கோ கார்களில் இடம்பெற்றிருந்த அதே 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 68 PS ஆற்றல் அல்லது கூடுதலான ஆற்றலை தரும் வகையில் பொருத்தப்பட வாய்ப்புகள் உள்ளது. மேலும் டட்சன் கோ க்ராஸ் மாடல் இந்த வருடத்தின் இறுதியில் சந்தைக்கு வரலாம் . இதன் விலை ரூ.4.50 லட்சத்தில் தொடங்கலாம்.

[envira-gallery id="7117"]

Exit mobile version